அமைச்சர் தியாகராஜன் பெயரை கூறி பல கோடி ரூபாய் மோசடி : முன்னாள் உதவியாளர் மனைவியுடன் கைது
மதுரை : மதுரையில், அமைச்சர் தியாகராஜன், முன்னாள் மேயர் இந்திராணியின் கணவர் பொன் வசந்த் ஆகியோர் பெயரை பயன்படுத்தி, பல கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்ட, அமைச்சரின் முன்னாள் உதவியாளர், அவரது மனைவியை போலீசார் கைது செய்தனர்.
மதுரை, கலை நகரை சேர்ந்தவர் எஸ்.எம்.பாலாஜி, 42; ரியல் எஸ்டேட் தொழில் செய்கிறார். ஓராண்டிற்கு முன் வரை அமைச்சர் தியாகராஜனின் உதவியாளராக இருந்தார். கடந்த, 2024ல், மதுரை, பொன்மேனியில் வீடு கட்டி விற்கும் பிரபல கட்டுமான நிறுவன உரிமையாளரை அணுகிய பாலாஜி, 'எனக்கு இரு பிளாட் வேண்டும்' என்றார்.'ஒரு பிளாட் வீடோடு சேர்த்து, 3.50 கோடி ரூபாய்' என்ற உரிமையாளரிடம், 'எனக்கு வீடாக வேண்டாம்; மனையாக தந்தால் போதும்' என்றார்.
இதை ஏற்க மறுத்த உரிமையாளரிடம், 'நான் அமைச்சர் தியாகராஜனின் உதவியாளர். மேயர் இந்திராணியின் கணவர் பொன்வசந்த் நம்மாள் தான். உங்களுக்கு மாநகராட்சி 'பர்மிட்' எல்லாம் பிரச்னை இல்லாமல் வாங்கிக்கொடுப்பது என் வேலை' என, மிரட்டும் வகையில் பாலாஜி பேசினார்.
இவரால், தன் தொழில் பாதித்துவிடக்கூடாது எனக்கருதிய கட்டுமான நிறுவன உரிமையாளர், மனையை மட்டும் விற்க ஒப்புக்கொண்டார். தொடர்ந்து, இரண்டு பிளாட்டிற்கும் சேர்த்து, 77 லட்சம் ரூபாய் பத்திரப்பதிவு செலவு மட்டும் கொடுத்து, இடத்தை மனைவி பெயரில் பாலாஜி பதிவு செய்து கொண்டார்.
ஆனால், மனைக்கான தொகையை தரவில்லை. பலமுறை கட்டுமான நிறுவன உரிமையாளர் கேட்டும், 'உங்களுக்கு மாநகராட்சி பர்மிட் எல்லாம் செலவில்லாமல் வாங்கித் தருகிறேன்' என்று கூறி, பணம் தராமல் காலம் தாழ்த்தினார்.
இச்சூழலில், மாநகராட்சி வரி முறைகேடு புகாரில், மேயரின் கணவர் பொன்வசந்த் கைதானதும் சுதாரித்து கொண்ட கட்டுமான நிறுவன உரிமையாளர், போலீஸ் கமிஷனர் லோகநாதனிடம் புகார் அளித்தார். மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து பாலாஜி, அவரது மனைவி கலாவதி, 42, ஆகியோரை கைது செய்தனர். பாலாஜி மீது ஏற்கனவே நில மோசடி, பண மோசடி புகார்கள் உள்ளன.
போலீசார் கூறுகையில், 'ரியல் எஸ்டேட் தொழில் செய்யும் பாலாஜி, மூன்று ஆண்டுகள் வரை மாத தவணை செலுத்தி மனையை சொந்தமாக்கிக் கொள்ளலாம் என அறிவித்து, பொதுமக்களிடம், பல கோடி ரூபாய் மோசடி செய்துள்ளார். பணத்தை திருப்பிக் கேட்டவர்களிடம், அமைச்சர் தியாகராஜன் பெயரை கூறி மிரட்டியுள்ளார்.
'இதை அறிந்துதான் அவரை ஓராண்டுக்கு முன் உதவியாளர் பணியில் இருந்து அமைச்சர் நீக்கியுள்ளார். பாலாஜி மீது, 2019ல் வேலுார் பொருளாதார குற்றப்பிரிவில் இதுபோன்ற மோசடி வழக்கு பதிவாகியுள்ளது' என்றனர்.
முன்னாள் உதவியாளரை பலிகடாவாக ஆக்குவது சுத்த திராவிடத்தனம்.
எப்பா திமுக .... தமிழ்நாட்டுக்கு விடியல் கிடைக்குமா ?
பணியில் இருந்து நீக்கிய போதே ஏன் பாலாஜி மீது புகார் அளிக்கவில்லை? இவருக்கு வர வேண்டியது வராததால் நீக்கினாரா? உதவியாளரே இவ்வளவு சம்பாத்தியம் என்றால் அமைச்சர் பெருமக்களின் வருமானம் என்னவாக இருக்கும்?மேலும்
-
ஆமைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்
-
மாயமான கோப்புகளை தேடி தர போக்குவரத்து அதிகாரிக்கு 'கெடு'
-
எம்.எல்.ஏ., பிறந்த நாள் விழா நலத்திட்ட உதவி வழங்கல்
-
புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்: வியாபாரிகள் எதிர்ப்பு
-
துபாயில் உறுப்பு தானம் காரங்காட்டில் உடல் அடக்கம்
-
தபால் கோட்ட கண்காணிப்பாளர் அறிவிப்பு