தாவரங்களுக்குள் ஒளிந்திருக்கும் பாக்டீரியா வித்தைகள்
தாவரங்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நமக்கு உயிர் காக்கும் மருந்துகளை வழங்கி வருகின்றன. ஆனால், அந்தத் தாவரங்களுக்குள் இயங்கும் வேதியியல் தொழிற்சாலைகளைப் பற்றி இன்றும் தெரியாத விஷயங்கள் பல உள்ளன. அண்மையில், இங்கிலாந்திலுள்ள யார்க் பல்கலை ஆய்வாளர்கள் 'சீன இலை-மலர்' (Chinese leaf-flower) என்ற புதர் தாவரம் எவ்வாறு மருந்தாக்கத்திற்கு வேண்டிய வேதிப்பொருட்களை உருவாக்குகிறது என்பதைக் கண்டறிந்துள்ளனர்.
இந்த ஆய்வின் வியப்பான முடிவு என்னவென்றால், செடியின் உள்ளே இருக்கும் ஒரு முக்கியமான மரபணு, வழக்கமான தாவர நொதிகளைப் போலன்றி, பாக்டீரியாக்களின் நொதிகளைப் போலவே செயல்படுகிறது. அதாவது, தனது நீண்டகாலப் பரிணாம வளர்ச்சியின் போது, தாவரங்கள் சில குறிப்பிட்ட நுண்ணுயிரிகளின் வேதியியல் 'வித்தைகளை' கடன் வாங்கியுள்ளன. இதேபோல வேறு பல தாவர இனங்களிலும் இத்தகைய மரபணுக்கள் காணப்படுகின்றன. எனவே, இது ஒரு தற்செயலான நிகழ்வு அல்ல.
தற்போது ஆய்வக அளவில் இருக்கும் இந்த கண்டுபிடிப்பு, தாவரங்கள் எவ்வாறு சிக்கலான வேதிப்பொருட்களை உருவாக்குகின்றன என்ற புரிதலை புரட்டிப் போட்டுள்ளது. எதிர்காலத்தில் உயிர்காக்கும் மருந்துகளைத் தொழிற்சாலைகளில் எளிதாக தயாரிக்கவும், இயற்கை வளங்கள் மற்றும் அரிய வகைச் செடிகள் அதிகப்படியாகச் சுரண்டப்படுவதைத் தடுக்கவும் இந்த கண்டுபிடிப்பு கைகொடுக்கும்.
மேலும்
-
ரஷ்யாவுடனான போரில் 55,000 வீரர்களை இழந்தோம்; உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அதிர்ச்சி தகவல்
-
மத்திய அரசு எங்களை பேச அனுமதிக்கவில்லை: கார்கே
-
விவசாயிகள் நலனில் சமரசம் இல்லை : அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் குறித்து மத்திய அமைச்சர் திட்டவட்டம்
-
விவேக் ராமசுவாமி தம்பதிக்கு மூன்றாவது குழந்தை
-
எனக்கு சவக்குழி தோண்ட முயற்சி: எதிர்க்கட்சிகள் மீது பிரதமர் மோடி குற்றச்சாட்டு
-
தேர்தல் அறிக்கை இணையதளம் : வெளியிட்டது தவெக