தேர்தல் அறிக்கை இணையதளம் : வெளியிட்டது தவெக

1

சென்னை: தேர்தல் அறிக்கைக்கு, பொதுமக்களும் தங்களின் பரிந்துரைகளை தெரிவிக்கும் வகையில் தேர்தல் அறிக்கை இணையதளத்தை தவெக வெளியிட்டது.

தவெக வெளியிட்ட அறிக்கை:

தமிழக வெற்றிக் கழகம் சார்பில் தேர்தல் அறிக்கை தயார் செய்யப்பட்டு வருகிறது. இந்தத் தேர்தல் அறிக்கையில் இடம் பெற வேண்டியவை குறித்துப் பொதுமக்களும் தங்களின் மேலான பரிந்துரைகளை அனுப்பலாம். இதற்காக உருவாக்கப்பட்டுள்ள பிரத்யேக இணையத்தளத்தின்
இணைப்பு இதோ...
https://tvkmanifesto2026.com பொதுமக்கள் இந்த இணைப்பிற்குச் சென்று, தங்கள் கருத்துகளைத் தெரிவிக்கலாம்.


தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் அறிக்கை, ஆட்சி மாற்றத்தை நோக்கி இருக்கும் தமிழ்நாட்டு மக்களின் நம்பிக்கை.

இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement