இந்தி நடிகர் கோவிந்தா மீது தாக்குதல் முயற்சி: மேலாளர் அதிர்ச்சி தகவல்

மும்பை: இந்தி நடிகர் கோவிந்தாவுக்கு கொலைம மிரட்டல், அவர் மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்த முயற்சி நடந்துள்ளது என்று அவரது மேலாளர் சசி சின்கா இன்று தெரிவித்துள்ளார்.

இந்திபடவுலகில் முக்கிய நடிகராக வலம் வந்தவர் கோவிந்தா, இந்நிலையில் அவரது வீட்டில் இன்று அதிகாலை 3.30 மணியளவில் மர்ம நபர்கள் ஒரு கும்பலாக வந்து தாக்குதல் நடந்ததாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக நடிகர் கோவிந்தாவின் மேலாளர் சசி சின்கா கூறியதாவது:

கோவிந்தாவுக்குத் தொடர்ந்து கொலை மிரட்டல் அழைப்புகள் வருகிறது. இன்று அதிகாலை அவரது வீட்டில் இருந்தபோது மர்ம நபர்கள் ஒரு கும்பலாக வந்து தாக்குதல் நடத்த முயற்சித்தனர். அந்த நேரத்தில் கோவிந்தா,தனது உரிமம் பெற்ற துப்பாக்கியைக் காட்டி அவர்களை விரட்டியதால், அவர் உயிர் தப்பினார்.

இந்தத் தற்காப்பு நடவடிக்கையின் போது கோவிந்தாவுக்குச் சிறு காயங்கள் ஏற்பட்டது.கடந்த 2024 அக்டோபரில், கோவிந்தா தனது துப்பாக்கியைச் சுத்தம் செய்யும் போது தவறுதலாகக் காலில் சுட்டுக்கொண்டார், ஆனால் தற்போதைய சம்பவம் திட்டமிட்ட தாக்குதல் முயற்சி. ஆகையால் இந்தச் சம்பவம் தொடர்பாகக் காவல்துறையில் எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது, ஆதாரமாக வீடியோ காட்சிகளும் உள்ளன.விரிவான விசாரணை அறிக்கைக்காக காத்திருக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement