தரம் தாழ்ந்து செயல்படும் எதிர்க்கட்சிகள்: பிரதமர் மோடி தாக்கு
புதுடில்லி: '' இந்திய வளர்ச்சியை பாராட்ட மனமின்றி எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்துள்ளன. அனுபவம் இருந்தும் எதிர்க்கட்சிகள் தரம் தாழ்ந்து செயல்படுகின்றன,'' என ராஜ்யசபாவில் பிரதமர் மோடி குற்றம் சாட்டினார்.
ராஜ்யசபாவில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பதிலளித்து பிரதமர் மோடி பேசியதாவது:
முன்னேறும் இந்தியா
பாரத தேசத்தில் இருக்கும் அனைத்து தரப்பினரின் வளர்ச்சியையும் இந்த அரசு உறுதி செய்துள்ளது. தேச நலன், அடித்தட்டு மக்களின் வளர்ச்சிக்கான அறிவிப்புகள் ஜனாதிபதி உரையில் உள்ளன. பெண்கள், விவசாயிகள், மீனவர் நலனுக்காக பலதிட்டங்களை அறிவித்துள்ளோம்.இந்த நூற்றாண்டின 2வது காலாண்டு இந்தியாவுக்கு சொந்தமானது.
உலக நாடுகளில் வயதானவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் அதே வேளையில், இந்தியாவில் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. உலக நாடுகளின் பிரச்னைகளை தீர்க்கும் வலிமை மிக்க நாடாக இந்தியா திகழ்கிறது. பொருளாதார நெருக்கடியை வென்று இந்தியா முன்னேறுகிறது.
மக்கள் நலனில் பாஜ அக்கறை செலுத்துவதால் தான் 3வது முறை ஆட்சி அமைத்துள்ளது.
பெரிய பொருளாதார நாடுகளை ஒப்பிடுகையில் இந்தியாவின் முன்னேற்றம் சிறப்பானதாக இருக்கிறது.
உலக பொருளாதாரத்தில் 2011ல் 11வது இடத்தில் இருந்தோம். இன்று 3வது இடத்தில் இருக்கிறோம். 2வது உலகப்போருக்கு பிறகு உலக நாடுகளின் வளர்ச்சியில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
புதிய அத்தியாயம்
பொருளாதார சக்திவாய்ந்த நாடாக இந்தியா திகழ்கிறது. சர்வதேச ஒத்துழைப்பில் இந்தியா புதிய அத்தியாயத்தை படைத்து வருகிறது. வருங்காலத்தை கருத்தில் கொண்டு வர்த்தக ஒப்பந்தத்தில் புரட்சி ஏற்படுத்தி வருகிறோம். உலக நாடுகள் மத்தியில் இந்தியா முக்கியத்துவம் பெறுகிறது.
உலகின் வளர்ச்சியில் தவிர்க்க முடியாதஇடத்தில் இந்தியா உள்ளது.
நான் குஜராத் முதல்வராக இருந்த போது ஜப்பானை போட்டியாக நினைத்தோம். அந்நாட்டுடன் ஒப்பந்தம் போட்டோம்.
ஓட்டு வங்கி அரசியலில் ஈடுபடுபவர்கள் நாட்டின் வளர்ச்சியை சிந்திக்க மாட்டார்கள். எதிர்க்கட்சிகள் செய்யும் தவறுகளை சரி செய்வதிலேயே நேரம் போகிறது. எதிர்க்கட்சிகள் பதில் சொல்லியாக வேண்டும். ஓடிவிடக்கூடாது.
காங்கிரஸ் ஆட்சியில் இருந்த பிரதமர்களை விட வேகமாக செயல்படுகிறேன். காங்கிரஸ் கட்சிக்கு தொலைநோக்கு பார்வை இல்லை. அனைத்து துறைகளிலும் இந்தியா வளர்ச்சி அடைந்துள்ளது. சிறுகுறு தொழில் துறையில் பல்வேறு சீர்திருத்தங்களை செய்துள்ளோம். எனது ஆட்சியில் நாட்டின் வளர்ச்சி கண்கூடாக தெரிகிறது.
பெரிய நாடுகள் ஆர்வம்
பெரிய நாடுகள் எல்லாம் இந்தியா உடன் வர்த்தக ஒப்பந்தம் செய்ய ஆர்வமாக உள்ளன.
ஐரோப்பிய யூனியன், அமெரிக்கா உடன் இந்தியா செய்த ஒப்பந்தங்களை உலக நாடுகள் வரவேற்றுள்ளன. இந்தியா செய்த ஒப்பந்தத்தால் இளைஞர்கள் பயன் அடைவார்கள். இன்னும் பல நாடுகளுடன் விரைவில் ஒப்பந்தம் போடப்பட உள்ளது. உலகளவில் இந்திய இளைஞர்களின் திறனுக்கான தேவை அதிகரித்து வருகிறது.
இத்தனை ஆண்டுகள் அனுபவம் இருந்தும் எதிர்க்கட்சிகள் தரம் தாழ்ந்து செயல்படுகின்றன. இந்திய வளர்ச்சியை பாராட்ட மனமின்றி எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்துள்ளன. ஊடுருவல்காரர்களை எதிர்க்கட்சிகள் பாதகாக்கின்றன.எதிர்க்கட்சியினரின் தரம்தாழ்ந்த செயல்பாடு கவலை அளிக்கிறது.மத்திய ஆட்சியில் பங்கு வகித்த கட்சிகள் இவ்வாறு தரம் தாழ்ந்து செயல்படுகின்றன. எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தது ஏமாற்றம் அளிக்கிறது. அரசில் பல ஆண்டு அனுபவம் பெற்றவர்கள்( காங்கிரஸ்) விவாதத்தை உறுதி செய்திருக்க வேண்டும். ஆனால், அவர்களும் வாய்ப்பை வீணடித்து விட்டனர். அப்படிப்பட்டவர்களை நாட்டு மக்கள் எப்படி நம்புவார்கள்.
வளர்ச்சி குறித்து தெரிந்து கொள்ளக்கூடாது என்பதற்காகவே எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்துள்ளன. அவர்கள் ஓடி ஒளிய முடியாது. பதில் சொல்லி ஆக வேண்டும்.
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
@block_B@
பிரதமர் மோடி உரையை துவங்கியதும் எதிர்க்கட்சி எம்பிக்கள் கோஷம் போட்டனர். ராகுலை பேச அனுமதிக்க வேண்டும் என்றனர். அவர்களை அமைதி காக்கும்படி பிரதமர் கூறினார். இருப்பினும் கோஷம் போட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் பிறகு வெளிநடப்பு செய்தனர்.block_B
பிரதமர் பயந்து கொண்டு லோக்சபைக்கு வரவில்லை என்று முழக்கம் இட்டவர்கள் இப்போது ராஜ்ய சபையில் மோடி பேசும்போது ஓடுவது ஏன்?
நாட்டுக்கு நன்மை தரும் வகையில் ஏதாவது நடந்தால் அவர்களுக்கு காக்கத் தானே செய்யும்.... அவர்கள் என்றைக்கும் நாட்டுக்கு நல்லது செய்ய நினைத்து இருக்கிறார்கள் ??
ராகுல் ஒரு பைத்தியமாகவே ஆகி விட்டார்
தமிழ் நன்கறிந்த பிரதமர் அவர்களே, செய்தக்க செய்யாமையானும் கெடும் என்பது வள்ளுவம். குற்ற வழக்குகளில் ராகுலை சிறைப்படுத்தி இருந்தால், ஊழல் ப சி , கார்த்தி போன்றோரை ஒழித்திருந்தால்
1999 ம் ஆண்டு முதல் 2004 வரையிலான வாஜ்பாய் ஆட்சியில் இந்தியா சீனாவுடனும் மற்ற நாடுகளுடனும் நடந்த வர்த்தகத்தில் அபரிமிதமான உபரியைக் கொண்டிருந்தது. பிறகு சோனியா காங்கிரஸின் தலைமையிலான (UPA) ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிக்கு வந்து மன்மோகன் சிங் பிரதமரானார். அவருடைய ஆட்சியில் இந்தியா மேலும் மேலும் வர்த்தகப் பற்றாக்குறைக்குள் தள்ளப்பட்டபோது, பொருளாதார மேதையானமன்மோகன்சிங் சீனாவுடனான வர்த்தக இலக்கை உயர்த்திக் கொண்டே இருந்தார்! உற்பத்திக்கு எந்த ஊக்கமும் அளிக்கவில்லை
தொழில்துறை உறங்கிக் கொண்டிருந்தது, இறக்குமதி மட்டுமே அதிகரித்தது. அதுபோக UPA கூட்டணி ஆட்சியில் அங்கம் வகித்த திமுக மத்திய அமைச்சர்களின் கட்டுக்கடங்காத ஊழல்கள் என இந்தியா அதல பாதாளத்திற்கு தள்ளப்பட்டது. அதற்கான விலையைத்தான் நாம் இப்போது கொடுத்துக் கொண்டிருக்கிறோம். இல்லையென்றால் இந்தியா இந்நேரம் நிச்சயம் உச்ச நிலையில் இருந்திருக்கும். பிரதமர் வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில் உருவாக்கப்பட்ட தங்க நாற்கரச் சாலைத் திட்டத்திற்குப் பிறகு, மன்மோகன் சிங்கின் 10 ஆண்டுகால திறமையற்ற ஆட்சியில் எந்த முன்னேற்றமும் இல்லாமல் நம்மை 30 ஆண்டுகள் பின்னுக்குத் தள்ளிவிட்டது. அதன் பிறகு ஆட்சிக்கு வந்த NDA கூட்டணியின் பிரதமராக பதவியேற்ற மோடியால்தான் இந்தியா அனைத்து துறைகளிலும் முன்னேறி இன்று உலக பொருளாதாரத்தில் நான்காம் இடத்தை பெற்றிருக்கிறது. நம்மிடம் வர்த்தகம் செய்ய மத்தியக் கிழக்கு நாடுகள் முதல் மேற்கத்திய ஐரோப்பிய நாடுகள் வரை போட்டி போட்டுக் கொண்டு ஒப்பந்தம் செய்கின்றனர். சற்றே சிந்தித்து பாருங்கள் இந்த வளர்ச்சி எல்லாம் பிரதமர் மோடியைத் தவிர வேறு யாராலும் கொண்டு வந்திருக்க முடியுமா? குறிப்பாக காங்கிரஸ்
இளவரசர் ராகுல்காந்தி பிரதமராக இருந்திருந்தால் இந்நேரம் இந்தியாவின் கதி என்னவாகியிருக்கும் என்பதை நினைத்துப் பாருங்கள்.
மோதி அய்யா...கவலைப் படாதீர்கள்...அவர்களெல்லாம் வெளிநாட்டின் கைக்கூலிகள்...அப்படித்தான் இருப்பார்கள்...இந்திய வளர்ச்சி அவர்களுக்கு எரிச்சலை தருகிறது...உங்களது நேர்மையான ஆட்சியால், அவர்களுக்கு கொழுப்பான தங்களது வயிற்றை மேலும் மேலும் வளர்க்க முடிய வில்லை...அதுதான் அவர்களது பிரச்சினை... எங்களைப் போன்ற, கோடான கோடி தேசப் பற்றாளர்கள், என்றும் உங்கள் பக்கமே...தொடர்ந்து முன்னேறுங்கள்...ஜெய் ஹிந்த்...
உண்மையிலேயே இது ஓவிய விஜய்தானா? நம்ப முடியலை!
ராஜ்யசபாவில் அமர்ந்து விவாதிக்க திராணி இல்லாமல் அங்கிருந்து அடிக்கடி வெளிநடப்பு செய்வதற்கா அவர்களுக்கு அந்த ராஜ்யசபா எம்பி பதவி கொடுக்கப்பட்டது? கமலஹாசனின் வீர எழுச்சி உரை பிரதமரிடமும் இருக்கும் என்று ஆவலோடு இருந்தோம். நாங்கள் கொடுத்துவைக்கவில்லை
என்னாது கமல் பேச்சை கேட்க கொடுத்து வைக்கலயா? தப்பிச்சோம்னு நெனைங்க!மேலும்
-
மேற்கு வங்கத்தில் தனித்து களம் காண்கிறது காங்கிரஸ்
-
கிறிஸ்துவர்கள் ஆக்கிரமிப்பில் இருந்து கோவில் நிலத்தை பாதுகாக்க உத்தரவு
-
அமைச்சர் தியாகராஜன் பெயரை கூறி பல கோடி ரூபாய் மோசடி : முன்னாள் உதவியாளர் மனைவியுடன் கைது
-
ரஷ்யாவுடனான போரில் 55,000 வீரர்களை இழந்தோம்; உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அதிர்ச்சி தகவல்
-
மத்திய அரசு எங்களை பேச அனுமதிக்கவில்லை: கார்கே
-
விவசாயிகள் நலனில் சமரசம் இல்லை : அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் குறித்து மத்திய அமைச்சர் திட்டவட்டம்