தங்கத்தின் விலை உயர்வு தொடரும் யு.பி.எஸ்., நிதி நிறுவனம் கணிப்பு

தங்கத்தின் விலை உயர்வு மேலும் தொடரும் என, உலகளாவிய நிதி சேவை நிறுவனமான யு.பி.எஸ்., தெரிவித்து உள்ளது.

இது குறித்து அதன் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது:

உலக சந்தைகளில் தங்கத்தின் விலை ஏற்றம் இன்னும் முடியவில்லை. 'மார்ஜின் கால்'கள் காரணமாக, குறுகிய காலத்தில், தங்கத்தின் விலை சரிந்து காணப்பட்டாலும், 2026ம் ஆண்டின் நடுப்பகுதிக்குள் தங்கத்தின் விலை, கிராம் ஒன்றுக்கு கிட்டத்தட்ட 18,000 ரூபாயாகவும், ஒரு சவரன் கிட்டத்தட்ட 1.44 லட்சம் ரூபாயாகவும் உயர வாய்ப்பு உள்ளது.

இது, தற்போதைய நிலவரத்திலிருந்து கிட்டத்தட்ட 25 சதவீத உயர்வு. வட்டி விகிதங்களில் மாற்றம், வலுவான அமெரிக்க டாலர், மேம்பட்ட புவியியல் அரசியல் சூழல் போன்றவை இன்னும் உருவாகாததால், தங்கத்தின் ஏற்றப் போக்கு தொடரும்.

வெள்ளி விலையில் தொடர்ந்து ஏற்ற இறக்கங்கள் இருக்கும். வெள்ளியில் தற்போது முதலீடு செய்ய நினைப்பவர்கள் அவசரப்பட்டு எந்தவொரு முடிவையும் எடுக்க வேண்டாம்.

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று மல்டி கமாடிட்டி சந்தையில், ஒரு கிலோ வெள்ளி கிட்டத்தட்ட 2.44 லட்சம் ரூபாய் அளவில் சரிந்து வர்த்தகமானது. இது, ஒரு வாரத்தில் 21 சதவீத சரிவு. மேலும் விலை குறைந்த பிறகே, வெள்ளி விலை ஏற்றத்துக்கு வரும் என்பது நிபுணர்களின் கருத்தாகும் இருக்கிறது.

Advertisement