இதே நாளில் அன்று

-பிப்ரவரி 6:

திருவாரூர் மாவட்டம், நன்னிலத்தில், ராஜு - தனலட்சுமி தம்பதியின் மகனாக, 1956ல், இதே நாளில் பிறந்தவர், சந்திரசேகரன் எனும் பிறைசூடன்.

கும்பகோணம், திருச்சியில் பட்டப்படிப்புகளை முடித்தவர், இயக்குநர் பாலசந்தரை, நன்னிலத்தில் சந்தித்து பாடல் எழுத வாய்ப்பு கேட்டார். அவர், 'திறமை இருந்தால் சென்னைக்கு வா' என்றதால், சென்னை வந்தார்.

சிறை படத்தில், இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன், இவருக்கு பாடல் எழுத வாய்ப்பளித்தார். இளையராஜாவின் இசையில் இவர் எழுதிய, 'இதயமே இதயமே, நடந்தால் இரண்டடி, நுாறு வருஷம், மீனம்மா மீனம்மா, ஆட்டமா தேரோட்டமா, சோல பசுங்கிளியே' உள்ளிட்ட பாடல்கள் பிரபலமடைந்தன.

'டப்பிங்' படங்களுக்கும் வசனம் எழுதிய இவர், சதுரங்க வேட்டை உள்ளிட்ட சில படங்களிலும் நடித்தார். தாயகம், என் ராசாவின் மனசிலே பட பாடல்களுக்காக தமிழக அரசின் விருது, தன் கவிதைகளுக்காக, 'கபிலர்' விருதையும் பெற்றார்.

ஜோதிடத்தில் புலமை பெற்ற இவர், தன் மரணத்தையும் முன்கூட்டியே கணித்ததாக கூறுவர். இவர், தன் 65வது வயதில், 2021, அக்டோபர் 8ல் காலமானார்.

இவரது பிறந்த தினம் இன்று!

Advertisement