'காதை செவிடாக்கிடுவாங்களே!'
தமிழக வெற்றிக் கழகம் கட்சியின், மூன்றாம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு, ராமநாதபுரம் அரண்மனை பகுதியில், அக்கட்சியினர், 30 கிலோ கேக்கை ஊர்வலமாக எடுத்து வந்து வெட்டினர். த.வெ.க., கட்சியின் சின்னமான, விசிலை ஊதியபடியே, பொதுமக்களுக்கு கேக் வழங்கினர்.
அப்போது, அரண்மனை பகுதிக்கு வந்த பஸ்சை ஓரமாக நிறுத்துவதற்காக, கண்டக்டர் விசில் அடித்தார். யார் விசில் பெருசு எனக் காட்டும் வகையில், த.வெ.க.,வினர் கூட்டமாக அடித்த விசிலுக்கு மத்தியில் டிரைவரும், கண்டக்டரும் குழம்பி தடுமாறினர். அங்கிருந்த போலீசார் வழிகாட்டுதலுக்கு பின், பஸ் ஓரமாக நிறுத்தப்பட்டது.
இதை பார்த்த முதியவர் ஒருவர், 'சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்த மாதிரி, இவங்களுக்கு விசில் சின்னத்தை குடுத்துட்டாங்களே... தேர்தல் முடியும் வரை, ஊதியே நம்ம காதை செவிடாக்கிடுவாங்களே...' என, புலம்பியபடியே அங்கிருந்து நகர்ந்தார்.
MGR ரசிகர்களுக்கு ஒரு காலத்தில் விசில் அடிச்சான் குஞ்சுகள் என்று பெயர். விஜய் ரசிகர்கள் விசில் குஞ்சுகள்.
தேர்தல் சமயத்தில் மட்டுமல்ல, எப்பொஸுதும் எங்கும் தமிழகத்தில் ஒரே கூச்சலும் அதீத சப்தமும் தான். பேருந்துகளில், கடைகளில், திருமண நிகழ்ச்சிகளில் வரைமுறையற்ற காது பிளக்கும்படியான அளவுக்கு அதிகமான சப்த அலைகள். ஓலி மாசு கட்டுப்பாடு அமைப்பு என்று ஒன்றிருந்தால் ஏன் செயல்படாமல் இருக்கிறார்கள். இந்த அளவில் கூடிய சீக்கிரத்தில் தமிழகத்தில் ஐம்பது சதவிகிதம் காத்து கேளாதவர்களாகத்தான் இருப்பார்கள்.
இவர்கள் விசில் நாடகம், கட்சிக்கு 'சங்கு ' ஊதினாலும் வியப்பில்லைமேலும்
-
தி.மு.க.,வை எதிர்க்கும் ஷோடங்கருக்கு காங்கிரசில் திடீர் முக்கியத்துவம்
-
தி.மு.க.,வுடன் நெருக்கம்; விமர்சிக்க தயக்கம் த.வெ.க., பற்ற வைப்பால் கொதிக்கும் அ.தி.மு.க.,
-
டில்லி 'உஷ்ஷ்ஷ்...!' பா.ஜ.,வுக்கு பிரச்னையை கிளப்பும் புத்தகம்!
-
டி 20 கிரிக்கெட் லீக் போட்டி ராயல் ரேஞ்சர்ஸ், சேலஞ்சர் அணிகள் வெற்றி
-
தே.ஜ., கூட்டணியில் 'மியூசிக்கல் சேர்'; விருதுநகர் மாநாட்டில் ஸ்டாலின் கிண்டல்
-
தெலுங்கானா உள்ளாட்சி தேர்தல்; மல்லுக்கட்டும் அரசியல் கட்சிகள்