கவுரவ விரிவுரையாளர்கள் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு

சென்னை: கவுரவ விரிவுரையாளர்கள் போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள அரசு கலை, அறிவியல் கல்லுாரிகளில் உள்ள காலிப்பணியிடங்களில், கவுரவ விரிவுரையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் பணி நிரந்தரம், மே மாத ஊதியம் உட்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, கவுரவ விரிவுரையாளர்கள், கடந்த 29ம் தேதி முதல் சென்னையில் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

சென்னை சைதாப்பேட்டையில் உள்ள கல்லுாரி கல்வி இயக்கக வளாகத்தில், கவுரவ விரிவுரையாளர்கள் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில், நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

கூட்டு நடவடிக்கை குழு நிர்வாகிகளை, முதல்வரின் தனி செயலர் சண்முகம் அழைத்து பேசினார். அதில், உடன்பாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து, போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.

இது குறித்து, கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ரமேஷ் கூறுகையில், “முதல்வரின் தனிச்செயலர் சண்முகம், ஆறு கோரிக்கைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்துள்ளார். அதை ஏற்று, போராட்டத்தை தற்காலிகமாக ஒத்தி வைத்துள்ளோம்,” என்றார்.

Advertisement