ஐபிஎஸ் அதிகாரிகள் 10 பேர் இடமாற்றம்
சென்னை: வேலூர் எஸ்பி மயில்வாகனன் உள்ளிட்ட ஐபிஎஸ் அதிகாரிகள் 10 பேர் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.
இது தொடர்பாக தமிழக அரசின் கூடுதல் தலைமைச்செயலர் தீரஜ் குமார் பிறப்பித்த உத்தரவில் கூறியுள்ளதாவது: கும்பகோணம் ஏஎஸ்பி அங்கித் சிங் - எஸ்பி ஆக பதவி உயர்வு பெற்று சேலம் வடக்கு துணை கமிஷனர் ஆகவும்
பொள்ளாச்சி ஏஎஸ்பி சிருஷ்டி சிங்- எஸ்பி ஆக பதவி உயர்வு பெற்று திருச்சி தெற்கு போலீஸ் கமிஷனர் ஆக நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.
மேலும், தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரிய ஐஜி ராஜேஸ்வரி - பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு ஐஜி ஆகவும்
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு ஐஜி கயல்விழி-
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரிய ஐஜி ஆகவும்
காத்திருப்பு பட்டியலில் இருந்த ரம்யா பாரதி- சென்னை குற்றப்பிரிவு ஐஜி ஆகவும்
சேலம் வடக்கு துணை கமிஷனர் சிவராமன் - வேலூர் எஸ்பி ஆகவும்
வேலூர் எஸ்பி மயில்வாகனன்- சென்னை தெற்கு சரக லஞ்ச ஒழிப்பு எஸ்பி ஆகவும்
திருச்சி தெற்கு துணை கமிஷனர் டி. ஈஸ்வரன் - ஆவடி போலீஸ் துணை கமிஷனர் ஆகவும்
ரயில்வே எஸ்பி ஐ. ஈஸ்வரன்- கோயம்பேடு துணை கமிஷனர் ஆகவும்
கோயம்பேடு துணை கமிஷனர் சுஜித் குமார் - சென்னை மேற்கு போக்குவரத்து துணை கமிஷனர் ஆகவும்
சென்னை மேற்கு போக்குவரத்து துணை கமிஷனர் சுஹாசினி - தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரிய எஸ்பி ஆகவும்
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரிய எஸ்பி நாகஜோதி - போலீஸ் பயிற்சி பள்ளி எஸ்பி/ முதல்வர் ஆகவும் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர். இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டு உள்ளது.
மேலும்
-
வரும் 5 மாநில தேர்தலிலும் தேஜ கூட்டணி வெற்றி பெறும்: எல்.முருகன் திட்டவட்டம்
-
அதிகாலை பயணத்தால் விபரீதம்; பஸ் மீது லாரி மோதியதில் 6 பேர் பலி
-
அமெரிக்கா வெளியிட்ட இந்திய வரைபடம்: பாகிஸ்தானுக்கு அதிர்ச்சி
-
தங்கம், வெள்ளி விலை உயர்வு; சவரனுக்கு 1,360 ரூபாய் அதிகரிப்பு
-
கும்பாபிஷேக விழா முகூர்த்த கால் நடுதல்
-
தை வெள்ளியை முன்னிட்டு அம்பாளுக்கு சிறப்பு அலங்காரம்