தெலுங்கானா உள்ளாட்சி தேர்தல்; மல்லுக்கட்டும் அரசியல் கட்சிகள்
தெலுங்கானாவில், வரும் 11ல் நடக்கவுள்ள நகர்ப்பு ற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற ஆளும் காங்., - எதிர்க்கட்சிகளான பாரத் ராஷ்டிர சமிதி - பா.ஜ., இடையே மும்முனை போட்டி நிலவுகிறது. மூன்று கட்சிகளும் மல்லுக்கட்டுவதால் தேர்தல் களம் அனல் பறக்கிறது.
தெலுங்கானாவில் முதல்வர் ரேவந்த் ரெட்டி தலைமையில் காங்., ஆட்சி நடக்கிறது. இங்கு, கடந்த ஆண்டு டிசம்பரில் நடந்த கிராமப்புற உள்ளாட்சி தேர்தலில், ஆளும் காங்., அபார வெற்றி பெற்றது.
திரைமறைவு கூட்டணி
முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவின் பாரத் ராஷ்டிர சமிதி, பா.ஜ., ஆகியவை சொல்லிக் கொள்ளும்படி வெற்றி பெறவில்லை. நவம்பரில், ஹைதராபாதில் உள்ள ஜூப்ளி ஹில்ஸ் சட்டசபை தொகுதியில் நடந்த இடைத்தேர்தலிலும் காங்கிரசே வென்றது.
இந்நிலையில், ஹைதராபாத் மாநகராட்சியை தவிர்த்து, தெலுங்கானாவில் உள்ள ஏழு மாநகராட்சிகள், 116 நகராட்சிகளுக்கு, வரும் 11ல் உள்ளாட்சி தேர்தல் நடக்கிறது. 13ல் ஓட்டுகள் எண்ணப்படுகின்றன.
ஜூப்ளி ஹில்ஸ் இடைத்தேர்தல், கிராமப்புற உள்ளாட்சி தேர்தல் வெற்றியால், 'குஷி'யில் உள்ள முதல்வர் ரேவந்த் ரெட்டி, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், 90 சதவீத இடங்களை கைப்பற்ற இலக்கு நிர்ணயித்துள்ளார்.
தேர்தல் பிரசாரங்களில், பாரத் ராஷ்டிர சமிதி, பா.ஜ., ஆகிய கட்சிகளை சரமாரியாக தாக்கிப் பேசி வருகிறார். இரு கட்சிகளும் ஒன்றே தான். திரைமறைவில் கூட்டணி வைத்து உள்ளன.
'முந்தைய பாரத் ராஷ்டிர சமிதி ஆட்சியில், நீர்ப்பாசன திட்டங்களில் நடந்த முறைகேடு குறித்து, சி.பி.ஐ., விசாரணைக்கு இதுவரை உத்தரவிடாதது ஏன்?' என, முதல்வர் ரேவந்த் ரெட்டி கேள்வி எழுப்பி வருகிறார்.
ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயு டுவின் தெலுங்கு தேசம், அம்மாநிலத்துக்குள் சுருங்கி விட்டதால், அக்கட்சியின் ஓட்டுகள் தங்களுக்கு கிடைக்கும் என்றும் ரேவந்த் ரெட்டி கணக்குப் போடுகிறார். காங்கிரசில் சேர்வதற்கு முன், அவர் தெலுங்கு தேசத்தில் இருந்தார்.
இந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், காங்., கணிசமான இடங்களில் வெற்றி பெறும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த, 2021 உள்ளாட்சி தேர்தலில், பெரும்பாலான இடங்களை கைப்பற்றிய பாரத் ராஷ்டிர சமிதி, 2023 சட்டசபை தேர்தல், ஜூப்ளி ஹில்ஸ் இடைத்தேர்தல், கிராமப்புற உள்ளாட்சி தேர்தல் என, தொடர் தோல்விகளால் பின்னடைவை சந்தித்துள்ளது.
உட்கட்சி பூசலால் அல்லல்படும் அக்கட்சி, தன் பாரம்பரிய ஓட்டுவங்கியை தக்கவைக்கவும் போராடி வருகிறது.
மும்முனை போட்டி
நகர்ப்புறங்களில் தன் செல்வாக்கை நிரூபிக்க பா.ஜ.,வும் தீவிரம் காட்டி வருகிறது. தேசிய திட்டங்களை முன்னிறுத்தி அக்கட்சி பிரசாரம் செய்து வருகிறது.
காங்., - பாரத் ராஷ்டிர சமிதி - பா.ஜ., இடையே மும்முனை போட்டி நிலவுவதால், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் களம் அனல் பறக்கிறது. இதில் யார் மகுடம் சூடப் போகின்றனர் என்பது, 13ல் தெரிந்து விடும்.
@block_P@
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், பா.ஜ., வேட்பாளர்களுக்கு ஆதரவாக ஆந்திர துணை முதல்வரும், ஜனசேனா தலைவருமான பவன் கல்யாண் மேற்கொள்ளவிருந்த பிரசாரம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. பயணத்திட்ட அட்டவணையில் ஏற்பட்ட சிக்கலே இதற்கு காரணம் எனக் கூறப்பட்டாலும், பின்னணியில் அரசியல் காரணங்கள் இருக்கின்றன. கடந்த டிசம்பரில், ஆந்திரா பிரிவினை குறித்து துணை முதல்வர் பவன் கல்யாண் பேசிய கருத்துகள், தெலுங்கானா உணர்வுகளுக்கு எதிராக இருப்பதாகக் கூறி, காங்., தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், அவர் மன்னி ப்பு கேட்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர். இந்த சூழலில் பவன் கல்யாண் பிரசாரம் செய்தால், அது தேவையில்லாத குழப்பத்தை ஏற்படுத்தி விடும் என்பதால், பிரசாரம் ரத்து செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
block_P
- நமது சிறப்பு நிருபர் -
மேலும்
-
திமுக- காங்கிரஸ் கூட்டணியில் விரிசல்; இபிஎஸ்
-
சேலத்தில் விஜயின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடுகளுடன் அனுமதி
-
மூன்று குழந்தைகளை பெற்றுக் கொள்ள வேண்டும்: மோகன் பாகவத் வலியுறுத்தல்
-
திமுகவிடம் அதிக தொகுதிகள் கேட்போம்: திருமா திட்டவட்டம்
-
மே 3ம் தேதி நீட் தேர்வு; இன்று முதல் விண்ணப்பிக்கலாம்
-
சந்தேகமா... டாக்டரைக் கேளுங்கள் பகுதிக்காக