டில்லி 'உஷ்ஷ்ஷ்...!' பா.ஜ.,வுக்கு பிரச்னையை கிளப்பும் புத்தகம்!
எதிர்க்கட்சிகள் பார்லி.,யின் இரு சபைகளையும் தொடர்ந்து முடக்க காரணம், ஒரு புத்தகம். இந்த புத்தகத்தின் சில பகுதிகளை, சபையில் படிக்க முயற்சித்தார் லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல். 'வெளியாகாத புத்தகத்திலிருந்து சில பகுதிகளை சபையில் படிக்கக் கூடாது' என, சபாநாயகர் அனுமதி தரவில்லை. இதனால், எதிர்க்கட்சிகளால் தொடர்ந்து சபை முடக்கப்பட்டு வருகிறது.
'கேரவன்' என்ற ஆங்கில இதழில், இந்த புத்தகத்தின் சில பகுதிகள் வெளியாகி உள்ளன. அதைத் தான் ராகுல் படிக்க முயற்சித்தார். என்ன புத்தகம் அது? 'போர் ஸ்டார்ஸ் ஆப் டெஸ்டினி' என்ற இந்த ஆங்கில புத்தகத்தை எழுதியவர், முன்னாள் ராணுவ தளபதி மனோஜ் முகுந்த் நரவனே. 2019 - 22 வரை ராணுவ தளபதியாக இருந்தவர். 2020ல் இந்தியா - சீனா எல்லைப் பிரச்னையின் போது தளபதியாக பணியாற்றியவர். அந்த சமயத்தில் மத்திய அரசு எப்படி செயல்பட்டது என்பது குறித்து விளக்கமாக எழுதியுள்ளார் நரவனே.
'முப்படை தளபதியாக இவர் நியமிக்கப்படலாம் என சொல்லப்பட்டது; ஆனால், அது நடக்கவில்லை. ஒருவேளை தனக்கு அந்த பதவி கிடைக்காத வெறுப்பில், ராகுலிடம் இந்த புத்தகத்தை கொடுத்து விட்டாரா நரவனே' என்று கூட, டில்லி அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
சமீபத்தில் நரவனேவிடம், 'இந்த புத்தகம் ஏன் இன்னும் வெளியாகவில்லை?' என்று கேட்டதற்கு, 'ராணுவ அமைச்சகம் இந்த புத்தகத்திற்கு அனுமதி கொடுத்தால் தான் வெளியாகும். நான், புத்தகத்தில் செய்ய வேண்டிய அனைத்து வேலைகளையும் முடித்து விட்டு, புத்தக வெளியீட்டுக்கு பதிப்பாளருக்கு கொடுத்து விட்டேன். அவர் தான் அனுமதி பெற வேண்டும். என் வேலை முடிந்து விட்டது' என்றார். இந்த புத்தகம் பிரச்னையைக் கிளப்பியுள்ள நிலையில், ராணுவ அமைச்சகம் அனுமதி தருமா என்பது சந்தேகமே.
வாசகர் கருத்து (1)
SUBBU,MADURAI - ,
08 பிப்,2026 - 05:40 Report Abuse
நரவனே அவர் எழுதிய அந்த புத்தகத்தில் எதுவும் தவறாக எழுதவில்லை. ஆனால் எப்போதும் மத்திய அரசையும் பாஜகவையும் எதிர்த்து விமர்சித்து எழுதும் The Caravan மாத இதழ் பத்திரிக்கையில் அமெரிக்க Deep State உத்தரவின்படி வேண்டுமென்றே ஒரு Article எழுதப்பட்டது. அதில் நரவானே எழுதிய புத்தகத்தில் இந்திய ராணுவத்தைப் பற்றி குறைகூறி எழுதிய வரிகள் உள்ளது என்று கேரவன் மாத இதழ் பொய்யாக கூறிய கேரவனின் Article ஐ காண்பித்துதான் ராகுல்காந்தி பார்லிமெண்டில் கலவரம் பண்ணினார்.
ஆக மொத்தம் இவையெல்லாம் முன்கூட்டியே திட்டமிட்ட சதியாகும். சரியாக பாராளுமன்றக் கூட்டம் நடக்கும் நாளன்று அவையை நடக்க விடாமல் இந்த பிரச்சனையை கிளப்ப வேண்டும் என்று ஜார்ஜ் சோரோஸின் Deep State இட்ட கட்டளையை ராகுல்காந்தி செவ்வனே நிறைவேற்றி இருக்கிறார். எந்த வழியிலாவது எப்பாடு பட்டாவது மோடியின் ஆட்சியை கவிழ்த்து விட வேண்டும் என்பதுதான் அவர்களின் எண்ணம்! அதற்காகத்தான் அவர்கள் இதுபோன்று விடாமுயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதற்கு
ராகுல்காந்தி என்ற துரோகியும்
துணை போவதுதான் சோகம்! 0
0
Reply
மேலும்
-
அடுத்த 10 ஆண்டுக்குள் நிலவில் நகரம்; எலான் மஸ்க் நம்பிக்கை
-
பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத்தொடர்: எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியால் லோக்சபா ஒத்திவைப்பு
-
டில்லியில் பார்லிமென்ட், பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்; போலீசார் விசாரணை
-
வார தொடக்க நாளில் தங்கம் விலை அதிகரிப்பு; சவரனுக்கு ரூ.1,840 உயர்வு
-
தேர்தலில் வெற்றி பெற்ற ஜப்பான் பிரதமர் சனே தகாய்ச்சிக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் அழைப்பு
-
தெற்கு சூடானில் ஒரு கோடி பேர் பாதிப்பு; தாக்குதலை கைவிடுமாறு ராணுவத்திற்கு ஐநா கோரிக்கை
Advertisement
Advertisement