மாயனுார் கதவணையில், 2,690 கன அடி தண்ணீர் திறப்பு
கரூர்: கரூர் மாயனுார் கதவணையிலிருந்து, 2,690 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருவதால், அகண்ட காவிரியில் ஓடை போல தண்ணீர் செல்கிறது.
கரூர்
மாவட்டம், மாயனுாரில் காவிரியாற்றின் குறுக்கே, 1.05 டி.எம்.சி., தண்ணீரை
தேக்கி வைக்கும் வகையில் கதவணை கட்-டப்பட்டுள்ளது. அதில் மேட்டூர் அணை,
அமராவதி அணை, பவானிசாகர் அணை மற்றும் நொய்யல் ஆற்று தண்ணீர் சேமித்து
வைக்கப்பட்டு, நான்கு கிளை வாய்க்கால்கள் மற்றும் காவிரி-யாற்றில்
முக்கொம்பு அணைக்கு தண்ணீர் திறந்து விடப்படுகி-றது.நேற்று காலை, 6:00
மணி நிலவரப்படி மாயனுார் கதவணைக்கு வினாடிக்கு, 1,453 கன அடி தண்ணீர்
வந்தது. இங்கிருந்து, 2,690 கன அடி காவிரி ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டு
வருகி-றது. மேட்டூர் அணையில் இருந்து, 8 மாதங்களாக டெல்டா பாச-னத்திற்கு
தண்ணீர் திறக்கப்பட்டு வந்தது. மேலும்,
கர்நாடகாவில் பலத்த மழை
காரணமாக, சில நாட்கள் ஒரு லட்சம் கன அடி மேல் தண்ணீர் வரத்து இருந்தது.
இதனால், காவிரி இரு கரைகளை தொட்டுக்கொண்டு தண்ணீர் சென்றது.
இந்நிலையில்
ஜன., 28 முதல் டெல்டா பாசனத்திற்கு நீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது.
தற்போது மேட்டூர் அணையில் இருந்து குடிநீர் தேவைக்கு மட்டுமே தண்ணீர்
திறக்கப்பட்டு வருகிறது.
இதனால், மாயனுார் கதவணையில் குறைந்த அளவில்
தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால், அகண்ட காவிரி ஆற்றில் மிக
சிறிய அளவில் தண்ணீர் ஓடுகிறது.
காவிரி ஆற்றில் மற்ற இடங்கள் வறண்டு காணப்படுகிறது.