சிறுதானியங்கள் பயிரிட விவசாயிகளுக்கு ஊக்கம்
சூலூர்: சூலூர், சுல்தான்பேட்டை, அன்னூர், காரமடை உள்ளிட்ட வட்டாரங்களில், தென்னை, வாழை, சோளம், மக்காச்சோளம் மற்றும் காய்கறி சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.
இதோடு சிறுதானியங்களை சாகுபடி செய்யும் முயற்சியை விவசாயிகள் மேற்கொள்ள வேண்டும், என,வேளாண் துறை அறிவுறுத்தி வருகிறது.
அதிகாரிகள் கூறியதாவது; தேசிய உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து இயக்கத்தின் ஊட்டமிகு தானியங்கள் திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வரு கிறது. உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை தரும் புரதம், கொழுப்பு, பொட்டாசியம், நார்சத்து, கார்போ ஹைட்ரேட் உள்ளிட்ட சத்துக்கள் அதிகளவில் சிறுதானியங்களில் உள்ளன. கேழ்வரகு தானியத்தை மதிப்பு கூட்டி, பிஸ்கட், சேமியா, ராகி மாவு, அல்வா உள்ளிட்டவைகளை தயாரிக்கலாம். சோளத்தில் இருந்து பிஸ்கட், ரொட்டி, பொரி உள்ளிட்டவைகளை தயாரிக்கலாம். கம்பில் இருந்து கூழ், சாதம், புட்டு, இட்லி, இடியாப்பம் தயாரிக்கலாம்.
சிறுதானியங்கள் அனைத்திலும் எதாவது ஒரு பொருளை தயாரிக்கலாம். அதன் மூலம் இரட்டிப்பு லாபம் கிடைக்கும். மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களுக்கு சந்தையில் மக்களிடையே வரவேற்பு கிடைக்கும் போது, வியாபாரமும் அதிகரிக்கும். அதன்மூலம் விவசாயிகள் தொழில்முனை வோராகவும் உயரலாம்.
மேலும்
-
அமெரிக்கா வெளியிட்ட இந்திய வரைபடம்: பாகிஸ்தானுக்கு அதிர்ச்சி
-
தங்கம், வெள்ளி விலை உயர்வு; சவரனுக்கு 1,360 ரூபாய் அதிகரிப்பு
-
கும்பாபிஷேக விழா முகூர்த்த கால் நடுதல்
-
தை வெள்ளியை முன்னிட்டு அம்பாளுக்கு சிறப்பு அலங்காரம்
-
தார்ச்சாலை அமைக்க தாமதம் விபத்தில் சிக்கும் ஓட்டுனர்கள்
-
குப்பையில் சின்டெக்ஸ் தொட்டி மக்கள் கடும் அவதி