விவேகானந்தா கல்லூரியில் நாளை ஆன்மிக கருத்தரங்கு

கோவில்பாளையம்: கவையன் புத்தூர் தமிழ்ச் சங்கம் சார்பில், இலக்கிய சொற்பொழிவு கோவில்பாளையம், விவேகானந்தா மேலாண்மை கல்லூரியில், நாளை (8ம் தேதி) காலை 9:30 மணிக்கு நடைபெறுகிறது.

துடியலூர் தமிழ்ச் சங்கத் தலைவர் கலையரசன் தலைமை வகித்து பேசுகிறார். அரசு கலை அறிவியல் கல்லூரி உதவி பேராசிரியர் மணிவண்ணன், 'அறனினும் இன்பமும் ஈனும்,' என்னும் தலைப்பில் சிறப்புரையாற்றுகிறார். பெரியபுராண நாயன்மார்களை நினைவு கூறும் கருத்தரங்கிற்கு, ஜி.கே.என்.எம். மருத்துவமனை டாக்டர் காந்தி தலைமை வகித்து பேசுகிறார்.

பணி நிறைவு பெற்ற தலைமை ஆசிரியர்கள், தமிழ்ச்சங்க நிர்வாகிகள், தமிழின் சிறப்பு, அறிவோம் ஒரு அரிய செய்தி, படித்ததில் பிடித்தது ஆகிய தலைப்புகளில் பேசுகின்றனர்.

Advertisement