அல்லப்பாளையம் செல்வ விநாயகர் கோயிலில் நாளை கும்பாபிஷேகம்

அன்னூர்: அல்லப்பாளையத்தில் உள்ள பெரிய விநாயகர், செல்வவிநாயகர் கோவிலில் புதிதாக முன் மண்டபம் கட்டப்பட்டுள்ளது.

மாகாளியம்மனுக்கு கோபுரத்துடன் கூடிய புதிய கோயிலும் , முத்தாலம்மனுக்கு மேடையும் கட்டப்பட்டு உள்ளது.

அய்யப்பனுக்கு ஆலயம் மற்றும் கோபுரங்கள் கட்டப்பட்டு, வர்ணம் தீட்டப்பட்டுள்ளது. கும்பாபிஷேக விழா இன்று (7ம் தேதி) துவங்குகிறது. இன்று மதியம் 2:00 மணிக்கு ஆலமர விநாயகர் கோவிலில் இருந்து முளைப்பாலிகை ஊர்வலம் புறப் படுகிறது.

மாலை 5:00 மணிக்கு கும்ப அலங்காரம், முதற்கால வேள்வி பூஜை, தீபாராதனை, கோபுர கலசம் வைத்தல் நடைபெறுகிறது.

இரவு 7:35 மணிக்கு, வள்ளி முருகன் கலைக்குழுவின் வள்ளி கும்மியாட்டம் நடைபெறுகிறது. நாளை (8ம் தேதி) காலை 8:00 மணிக்கு விநாயகர், மாகாளியம்மன், முத்தாலம்மன், ஐயப்பன் ஆகிய தெய்வங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.

அவிநாசி வாகிசர் மடத்தின் காமாட்சி தாச சுவாமிகள் அருளுரை வழங்குகிறார். கேரள செண்டை மேள நிகழ்ச்சி நடை பெறுகிறது.

Advertisement