இறந்த பறவையை தொடக்கூடாது பறவை காய்ச்சலால் எச்சரிக்கை

மேட்டுப்பாளையம்: கேரளாவில் பறவை காய்ச்சல் பாதிப்பு உள்ள நிலையில், தமிழகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.

கோவை ஊரக பகுதிகளில் உள்ள கோழி பண்ணைகள் அலர்ட் செய்யப்பட்டுள்ளன. காரமடை, மேட்டுப்பாளையம், சிறுமுகை, அன்னூர், துடியலூரில் கால்நடை மருத்துவர்கள் பண்ணைகளுக்கு சென்று கிருமிநாசினி தெளித்தல், நோய் தடுப்பு நடவடிக்கைகள் பற்றி அறிவுரை வழங்குகின்றனர். வாத்துகளுக்கும் ரத்த மாதிரி எடுத்து ஆய்வுக்கு அனுப்பி வைக்கின்றனர்.

அரசு மருத்துவமனை முதன்மை மருத்துவர் கார்த்திக் மகாராஜா, இறந்து கிடக்கும் பறவைகளை வெறும் கைகளால் தொடக்கூடாது. உடனடியாக உள்ளாட்சிக்கு தகவல் சொல்லி அப்புறப்படுத்த வேண்டும்.

காய்ச்சல், தலைவலி, தொண்டை வலி வந்தால் மருத்துவமனைக்கு வர வேண்டும். சுய மருத்துவம் கூடாது. பழங்களை நன்கு கழுவி உண்ண வேண்டும் என்றார்.

Advertisement