தபால் கோட்ட கண்காணிப்பாளர் அறிவிப்பு

பொள்ளாச்சி: பொள்ளாச்சி அஞ்சலக கோட்டத்தில், கடந்தாண்டு டிச. 31ல் முடியக்கூடிய அரையாண்டுக்கான மேற்கு மண்டல அளவிலான, தபால் ஓய்வூதியர்கள் குறைதீர் கூட்டம் நடக்கவுள்ளது. குறைதீர் கூட்டத்தில் ஆலோசிப்பதற்கான குறைகளை, தபாலிலோ அல்லது மின்னஞ்சல் வாயிலாகாவோ அனுப்பலாம்.

'அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகம், பொள்ளாச்சி கோட்டம், பொள்ளாச்சி- 642001' என உறையின் மேல், 'மண்டல பென்ஷன் அதலாத்' என குறிப்பிடப்பட வேண்டும்.

மின்னஞ்சல் அனுப்புவதற்கான முகவரி, dopollachi.tn@indiapost.gov.in அனுப்ப வேண்டும். அதில், பொருளில், 'மண்டல பென்ஷன் அதலாத்' என குறிப்பிடணும்.புகார்களை வரும், 9ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

கோட்ட அலுவலகத்தினால் தீர்க்கப்படாத குறைகளை மட்டும் கோட்ட அலுவலகத்தில் இருந்து பெறப்பட்ட பதிலுடன் இந்த குறைதீர் கூட்டத்துக்கு அனுப்ப வேண்டும். இத்தகவலை, கண்காணிப்பாளர் சாந்தினி பேகம் தெரிவித்துள்ளார்.

Advertisement