மாயமான கோப்புகளை தேடி தர போக்குவரத்து அதிகாரிக்கு 'கெடு'
சென்னை: 'மனுதாரர் கோரிய கோப்புகள், அலுவலகத்தில் பராமரிக்கவில்லை எனக்கூறிய, போக்குவரத்து ஆணைய உதவி செயலர், விரைவில் கோப்புகளை தேடி கண்டுபிடித்து வழங்க வேண்டும்' என, மாநில தகவல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை கே.கே.நகரை சேர்ந்தவர் முருகேசன். இவர், தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ், கடந்த 2022 அக்.,10ல், தகவல்களை கோரி, போக்குவரத்து ஆணைய பொது தகவல் அலுவலருக்கு விண்ணப்பித்தார்.
அதில், எல்.பி.ஜி., மற்றும் சி.என்.ஜி., காஸ் மறுசீரமைப்பு மையங்கள் அனுமதி தொடர்பான குறிப்பு, கோப்புகளின் ஆவண நகல்கள் உட்பட பல தகவல்களை கேட்டிருந்தார்.
மனுதாரருக்கு சரியான தகவல் கிடைக்காததால், மாநில தகவல் ஆணையத்தில் மேல்முறையீடு செய்தார். சமீபத்தில் நடந்த விசாரணைக்கு, மனுதாரர் ஆஜரானார்.
சென்னை போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு ஆணையரக உதவி செயலர் ஸ்ரீதரன் ஆஜராகி, ''மனுதாரருக்கு பதில் அளிக்கப்பட்டு விட்டது. அவர் கோரும் கோப்புகள், தம் அலுவலகத்தில் பராமரிக்கப்படவில்லை,'' என்றார்.
அதற்கு மனுதாரர், 'தான் கோரிய தகவல்கள், நிச்சயம் பராமரிக்கப்பட வேண்டிய நிரந்தர பதிவேடு' என்றார்.
விசாரணை முடிவில், மாநில தலைமை தகவல் ஆணையர் முகமது ஷகீல் அக்தர் பிறப்பித்த உத்தரவு:
சென்னை போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு ஆணையரக உதவி செயலரும், பொதுத் தகவல் அலுவலருமான ஸ்ரீதரன், மனுதாரர் கோரிய தகவல்களை தேடிக் கண்டுபிடித்து, ஒரு மாத காலத்திற்குள் விரைவு தபாலில் அனுப்ப வேண்டும்.
பின், நிறைவேற்றுகை அறிக்கை மற்றும் மனுதாரர் பெற்றுக் கொண்டதற்கான ரசீதை, வரும் மார்ச் 5ல் ஆணையத்தில், நேரில் சமர்ப்பிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும்
-
இந்திய அணி அமர்க்கள ஆரம்பம் * கேப்டன் சூர்யகுமார் சூப்பர் ஆட்டம்
-
ஷெப்பர்டு 'ஹாட்ரிக்' சாதனை * வெஸ்ட் இண்டீஸ் கலக்கல்
-
இந்திய பெண்கள் அணி சாம்பியன்: தெற்காசிய கால்பந்து தொடரில் அசத்தல்
-
முத்துப்பாண்டி ராஜா தேசிய சாதனை: 'சீனியர்' பளுதுாக்குதலில் அபாரம்
-
இந்திய அணிக்கு ரூ. 7.5 கோடி பரிசு: பி.சி.சி.ஐ., அறிவிப்பு
-
உலக விளையாட்டு செய்திகள்