உலக விளையாட்டு செய்திகள்

பைனலில் சீனா
குயிங்டாவோ: சீனாவில், ஆசிய அணிகளுக்கான பாட்மின்டன் சாம்பியன்ஷிப் தொடர் நடக்கிறது. பெண்களுக்கான அரையிறுதியில் சீன அணி 3-0 என்ற கணக்கில் சீனதைபே அணியை வீழ்த்தியது. மற்றொரு அரையிறுதியில் தென் கொரிய அணி 3-1 என, இந்தோனேஷியாவை வென்றது. பைனலில் சீனா, தென் கொரியா மோதுகின்றன. ஆண்களுக்கான அரையிறுதியில் ஜப்பான் அணி 3-1 என, இந்தோனேஷியாவை வீழ்த்தியது.


லீட்ஸ் அணி வெற்றி
லீட்ஸ்: இங்கிலாந்தில், பிரிமியர் லீக் கால்பந்து 34வது சீசன் நடக்கிறது. லீட்சில் நடந்த லீக் போட்டியில் நாட்டிங்காம் பாரெஸ்ட், லீட்ஸ் அணிகள் மோதின. அபாரமாக ஆடிய லீட்ஸ் அணி 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இதுவரை விளையாடிய 25 போட்டியில், 7 வெற்றி, 8 'டிரா', 10 தோல்வி என, 29 புள்ளிகளுடன் லீட்ஸ் அணி 16வது இடத்துக்கு முன்னேறியது.


எக்ஸ்டிராஸ்

* துருக்கியில் நடந்த சர்வதேச டேபிள் டென்னிஸ் 'பீடர்' தொடர், பெண்கள் இரட்டையர், பைனலில் இந்தியாவின் திவ்யான்ஷி, சிண்ட்ரெல்லா ஜோடி 3-1 என விங் லாம், வாங் டங் ஜோடியை (ஹாங்காங்) வென்று சாம்பியன் ஆனது.


* அசாமில், சந்தோஷ் டிராபி சீனியர் தேசிய கால்பந்து சாம்பியன்ஷிப் 79வது சீசன் நடக்கிறது. இன்று நடக்கும் பைனலில் கேரளா, சர்வீசஸ் அணிகள் மோதுகின்றன.

* டில்லி ஓபன் ஏ.டி.பி., சேலஞ்சர் டென்னிஸ் தொடரின் (பிப். 16-22) ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் சுமித் நாகல் பங்கேற்கிறார்.

* அமெரிக்காவின் சிகாகோவில் நடக்கும் விண்டி சிட்டி ஓபன் ஸ்குவாஷ், 2வது சுற்றில் இந்திய வீராங்கனை அனாஹத் சிங் 2-3 என, பெல்ஜியத்தின் டின்னே கிலிசிடம் தோல்வியடைந்தார். இந்திய வீரர் அபே சிங் 0-3 என எகிப்தின் முஸ்தபா அசலிடம் வீழ்ந்தார்.

* குஜராத் மாநிலம் சூரத்தில் நடந்த இந்தியன் ஸ்டிரீட் பிரிமியர் லீக் 3வது சீசனுக்கான (10 ஓவர்) பைனலில் சென்னை அணி (103/7), 29 ரன் வித்தியாசத்தில் கோல்கட்டா அணியை (74/9) வீழ்த்தி, முதன்முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.

* சீனாவில் நடக்கும் ஆசிய கோப்பை டேபிள் டென்னிஸ், ஆண்கள் ஒற்றையர் 'ரவுண்டு-16' போட்டியில் இந்தியாவின் ஆகாஷ் பால் 0-3 என, சீனாவின் லின் ஷிடோங்கிடம் தோல்வியடைந்தார்.

Advertisement