9 மாவட்ட விவசாயிகள் தர்ணா போராட்டம்

- நமது நிருபர் -:

தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில், திருப்பூர் மண்டல அளவிலான தர்ணா போராட்டம், ராயபுரம் ரவுண்டானா அருகே நடைபெற்றது. விவசாயிகள் சங்க மாநில செயலாளர் பெருமாள் தலைமை வகித்தார்.
திருப்பூர், கோவை, ஈரோடு, கரூர், நாமக்கல், நீலகிரி, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய ஒன்பது மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள், பெண்கள் திரளானோர் பங்கேற்றனர். விவசாயிகள் சங்க திருப்பூர் மாவட்ட துணை செயலாளர் கொளந்தசாமி வரவேற்றார். விளை பொருட்களுக்கு இரட்டிப்பு விலை கிடைக்கச் செய்யவோம்; விவசாயிகள் தற்கொலையை தடுத்து நிறுத்துவோம் என உறுதி அளித்துவிட்டு, பிரதமர் மோடி, விவசாயிகளுக்கு விரோதமாக செயல்படுவதாக கூறி, தர்ணாவில் ஈடுபட்டனர்.

விவசாயிகள் சங்க மாவட்ட பொருளாளர் பாலதண்டபாணி நன்றி கூறினார்.

Advertisement