ஆற்றுப்பாலத்தை சீரமைக்கணும்

உடுமலை: அமராவதி ஆற்றுப்பாலத்தினை சீரமைக்க, நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கோவை - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில், மடத்துக்குளம் அருகே அமராவதி ஆற்றுப்பாலம் உள்ளது. இது திருப்பூர் - திண்டுக்கல் மாவட்டங்களை இணைக்கும் பகுதியாக உள்ளது. இப்பாலத்தின் வழியாக, தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன.

இப்பாலத்தில் தடுப்புச்சுவரில் ஆங்காங்கே, விரிசல், சேதம் ஏற்பட்டுள்ளது. இதனால், விபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளது. பாலத்தை சீரமைக்க வேண்டும் என, வாகன ஓட்டுனர்களும், பொதுமக்களும் பல முறை அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்துள்ளனர். நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

எனவே, இப்பாலத்தினை சீரமைக்க நெடுஞ்சாலைத்துறையினரும், மடத்துக்குளம் பேரூராட்சியினரும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து தரப்பினரும் எதிர்பார்க்கின்றனர்.

Advertisement