பொங்கல் தொகுப்பை வாங்காத 40 ஆயிரம் பேர்

பொள்ளாச்சி: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழகம் முழுவதும், 2.22 கோடி அரிசி ரேஷன் கார்டுதாரர்களுக்கு, 3,000 ரூபாய் ரொக்கம், ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை, கரும்பு அடங்கிய பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது. பொங்கல் தொகுப்பை 40 ஆயிரம் கார்டுதாரர்கள் வாங்காதது தெரியவந்துள்ளது.

மாவட்ட வழங்கல் அலுவலர் விஸ்வநாதன் கூறுகையில், ''கோவை மாவட்டத்தில் மொத்தம் உள்ள 11.21 லட்சம் அரிசி கார்டுதாரர்களில், 10 லட்சத்து 80 ஆயிரத்து 819 கார்டுதாரர்களுக்கு பொங்கல் தொகுப்பு, 3,000 ரூபாயுடன் வழங்கப்பட்டுள்ளது.

இதில், 40 ஆயிரம் கார்டுதாரர்கள் வாங்கவில்லை. கடந்த மாதம் 24ம் தேதியுடன் பொங்கல் தொகுப்பு வழங்கும் பணி முடிந்தது,'' என்றார்.

Advertisement