'கல்தார்' வேதி மருந்தால் வாழ்நாட்களை இழக்கும் மா மரங்கள் விவசாயிகளுக்கு தோட்டக்கலைத்துறை எச்சரிக்கை
திண்டுக்கல்: ''மண்ணின் காரத்தன்மையை அதிகரித்து மகசூலை பாதிக்கும் 'கல்தார்' மருந்தின் பயன்பாடு அதிகரித்துள்ளதால் மா மகசூல் பாதிப்பதுடன் மரங்களின் வாழ்நாட்கள் 30 ஆண்டுகள் குறையும்'' என தோட்டக்கலைத்துறை எச்சரித்துள்ளது.
தமிழகத்தில் 1.46 லட்சம் எக்டேரில் மா சாகுபடி நடக்கிறது. இதன் பரப்பை அதிகரிக்க தோட்டக்கலைத்துறை திட்டமிட்டு கிருஷ்ணகிரி, தர்மபுரி, வேலுார், திண்டுக்கல், தேனி, மதுரை, திருப்பத்துார் மாவட்டங்களில் பணிகளை மேற்கொண்டுள்ளது.
நோய், பூச்சித் தாக்குதல் கட்டுப்படுத்த ஆய்வு நடந்தது. அப்போது மண்ணின் காரத்தன்மை அதிகரித்து வேரின் நுண்ணாட்டம் பாதிக்கப்பட்டு வருவது தெரியவந்தது.
காரணம் குறித்து ஆய்வு செய்ததில் சீசன் இல்லா காலத்திலும் பயன்பெறுவதற்காக விவசாயிகள் பயன்படுத்தும் 'கல்தார்' என்ற வேதி மருந்தே காரணம் என தெரியவந்தது. மரங்களின் வேரில் படரும் மண்ணின் காரத்தன்மை 8 சதவீதத்திற்கு மேல் அதிகரித்து வேர் கிரகித்துள்ள நுண்ணுாட்டச் சத்துக்கள் குறைந்து வலுவிழக்கின்றன என விவசாயிகளுக்கு தோட்டக்கலைத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
திண்டுக்கல் தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் காயத்ரி கூறியதாவது:
60 ஆண்டுகள் பசுமையாக வளர்ந்து மகசூல் தரக்கூடிய ஒரு மா மரத்தின் வாழ்நாட்கள் 30 முதல் 28 ஆண்டுகளாக குறைகிறது. இது எதிர்காலத்தில் பெரும் பொருளாதார இழப்பை ஏற்படுத்தும். மண்வளமும் கெட்டுப்போகும். மாற்றுப்பயிர்களும் செய்ய முடியாது.
எனவே மா விவசாயிகள் மண்வளம், மரத்தின் அடிவேர் பகுதியின் திறனை பாதிக்கும் கல்தார் வேதி மருந்தினை பயன்படுத்துவை நிறுத்த வேண்டும். இது குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் அறிவுறுத்தியுள்ளது என்றார்.
மேலும்
-
இந்திய அணி அமர்க்கள ஆரம்பம் * கேப்டன் சூர்யகுமார் சூப்பர் ஆட்டம்
-
ஷெப்பர்டு 'ஹாட்ரிக்' சாதனை * வெஸ்ட் இண்டீஸ் கலக்கல்
-
இந்திய பெண்கள் அணி சாம்பியன்: தெற்காசிய கால்பந்து தொடரில் அசத்தல்
-
முத்துப்பாண்டி ராஜா தேசிய சாதனை: 'சீனியர்' பளுதுாக்குதலில் அபாரம்
-
இந்திய அணிக்கு ரூ. 7.5 கோடி பரிசு: பி.சி.சி.ஐ., அறிவிப்பு
-
உலக விளையாட்டு செய்திகள்