அங்கன்வாடிகளுக்கு கோடை விடுமுறை 2026 மே அமலாகிறது

சிவகங்கை: தமிழகத்திலுள்ள அங்கன்வாடி மையங் களுக்கு மே மாதம் விடுமுறை என சமூக நலன், மகளிர் உரிமைத்துறை முதன்மை செயலாளர் ஜெயஸ்ரீமுரளிதரன் உத்தரவிட்டுள்ளார்.

அங்கன்வாடி மைய ஊழியர்கள், ஐ.சி.டி.எஸ்., மைய ஊழியர்கள் சங்கத்தினர் சில நாட்களாக பணி நிரந்தரம், மே மாதம் கோடை விடுமுறை விட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதையடுத்து சங்கங்களின் கோரிக்கையை ஏற்று 2026 மே கோடை விடுமுறை விடப்படும் என அந்த உத்தரவில் தெரிவித்துள்ளார்.

கோடை விடுமுறை காலங்களில் 2 முதல் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு இணை உணவு வழங்குவதற்கு வழிவகை செய்யும் நோக்கிலும், உலர் உணவு வழங்க வழிவகை இல்லை என்பதால், ஒரு குழந்தைக்கு நாள் ஒன்றுக்கு 50 கிராம் சத்து மாவு என கணக்கிட்டு 24 நாட்களுக்கு ஒரு கிலோ 200 கிராம் சத்து மாவினை குழந்தைகளின் வீட்டிற்கே எடுத்து சென்று வழங்க வேண்டும் என உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement