கூட்டணியில் காங்கிரசை இழிவாக பேசும்முறை தொடர்வது நல்லதல்ல; மீண்டும் கொளுத்தி போட்ட மாணிக்கம் தாகூர்
சென்னை: கூட்டணியில் காங்கிரசை இழிவாக பேசும்முறை தொடர்வது நல்லதல்ல என்று காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் கூறி உள்ளார்.
தமிழகத்தில் இண்டி கூட்டணிக்கு திமுக தான் தலைமை என்றபோதிலும், புதுச்சேரியில் கூட்டணிக்கு காங்கிரஸ் தான் தலைமை வகித்து வருகிறது. இப்படிப்பட்ட அரசியல் சூழலில் கூட்டணியின் தலைமையான காங்கிரசை தவிர்த்துவிட்டு இண்டி கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகளுடன் திமுக அண்மையில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை தொடங்கியது. இதில் காங்கிரசுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.
பேச்சுவார்த்தையின் போது கலந்து கொண்ட அனைத்துக் கட்சிகளுமே புதுச்சேரியில் இண்டி கூட்டணிக்கு திமுகவை தலைமையேற்குமாறு வலியுறுத்தி இருக்கின்றன. இந்த விவகாரத்தில் திமுகவின் செயலுக்கு நாராயணசாமி அதிருப்தியை வெளியிட்டு இருந்தார்.
மேலும், புதுச்சேரியில் காங்கிரஸ்-திமுக கூட்டணி இடையேயான உரசல்கள் குறித்தும் செய்திகள் நாளிதழ்களிலும் வெளியாகின. இந் நிலையில் புதுச்சேரி அரசியல் நிலவரத்தை சுட்டிக்காட்டி காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர், கூட்டணியில் காங்கிரசை இழிவாக பேசும் முறை தொடர்வது நல்லதல்ல என்று கூறி உள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள பதிவு விவரம்;
கூட்டணியில் 8 % ஒட்டு வைத்து உள்ள கட்சி தலைமை தாங்குமா, இல்ல 26% உள்ள கட்சி தலைமை தாங்குமா்? ஏன் கூட்டணியில் காங்கிரஸ் கட்சியை இழிவாக பேச வேண்டும்? தொடரும் இந்த முறை நல்லது இல்ல .
இவ்வாறு அந்த பதிவில் மாணிக்கம் தாகூர் குறிப்பிட்டு உள்ளார்.
வாசகர் கருத்து (19)
thuppuravu - chennai,இந்தியா
06 பிப்,2026 - 23:49 Report Abuse
தன்மானம் இல்லாதவர்கள் .ஒவ்வொரு மனிதனுக்கும் தன்மானம் சுயபுத்தி அவசியம் .இல்லையென்றால் மனிதகுலத்திற்கு அப்பாற்பட்டவர்களாகத்தான் இருக்கமுடியும் . 0
0
Reply
GMM - KA,இந்தியா
06 பிப்,2026 - 19:26 Report Abuse
காங்கிரஸ் தன் வலிமை தெரியாமல் திமுகவிடம் மண்டியிட்டு வருகிறது. ஆரம்பத்தில் ஆட்சியில் பங்கு கேட்டு இருந்தால் காங்கிரஸ், சிறுத்தை, போன்ற கட்சிகள் வளர்ந்து இருக்கும். நாம் பிறக்கும் முன் கலவரம் நிகழ்ந்துள்ளது. காங்கிரஸ் இயக்கம் பலரை காப்பாற்றி இருக்கிறது. அதில் உயிர் தப்பிய குடும்பம் சில தலைமுறையாக காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக உள்ளது. காசு, பதவி நாடாமல் வாக்கு செலுத்தி வருகிறது. அவர்களுக்கு திமுக கூட்டணி பிடிக்கவில்லை. இருந்தும் கட்சி சொல்படி வாக்களித்து வருகின்றனர். தாகூர் முயற்சி காங்கிரஸ் வளர்ச்சிக்கு உதவும். கடின உழைப்பு திமுகவினர் பலன் பெறுவது அரிது. திராவிடம் கூட்டணி கட்சி, வாக்காளர்களை ஏலத்தில் எடுத்து வருகிறது. 0
0
Reply
V Venkatachalam, Chennai-87 - Chennai,இந்தியா
06 பிப்,2026 - 19:16 Report Abuse
திருட்டு தீயமுக யாரை கழட்டி விட்டாலும் கான்+கிராஸ்ஸையும் திருமா இருவரையும் கழட்டி விடாது. இவங்க தான் திருட்டு தீயமுக வுக்கு துவார பாலகர்கள் மாதிரி. இதை மாணிக் நல்லா தெரிஞ்சு வச்சுகிட்டு தான் அம்பு உடுறாரு.
முகஸ் தன்னோட ஆளுங்களுக்கு மட்டுமே முந்திரி பதவி குடுப்பாரு. ஓட்டு விகிதாசாரம் படி கான்+கிராஸ் காரனுக்கும் முந்திரி பதவி குடுக்கலாமே. கான்+கிராஸ் காரனுங்க கேட்கும் அளவுக்கு வச்சுக்கிட்டு ஏன் பேந்த பேந்த முழிக்கணும். 0
0
Reply
சுந்தரம் விஸ்வநாதன் - coimbatore,இந்தியா
06 பிப்,2026 - 19:16 Report Abuse
இந்திராவை , நேருவை ,காமராஜரைப்பற்றி அசிங்கமாக அருவருப்பாக ஆபாசமாக திமுக பேசியபோது வராத சூடும் சொரணையும் கூட்டணியில் தொகுதி உடன்பாட்டுக்கு கூப்பிடாததில் வந்துவிட்டது என்பதை நம்பமுடியவில்லை. 0
0
Reply
Santhakumar Srinivasalu - ,
06 பிப்,2026 - 18:25 Report Abuse
விருதுநகரில் தட்டு தடுமாறி வந்து விட்டு வாய் கொழுப்பு பேசி தமிழ் நாட்டில் கூட்டணிக்கே வேட்டு வைப்பார் போல தெரிகிறது? 0
0
Reply
பேசும் தமிழன் - ,
06 பிப்,2026 - 18:14 Report Abuse
அப்போ திமுக கட்சிக்கு 8 சதவீதம் தான் ஓட்டு வங்கி இருக்கிறதா.... அவர்கள் நாங்கள் தான் இருப்பதிலேயே பெரிய கட்சி என்று கூறிக் கொண்டு இருக்கிறார்களே ?...இப்போது தான் உண்மை வெளிவருகிறது.... அதனால் அப்படி பார்த்தால்.... அவர்களை விட நீங்கள் தான் பெரிய கட்சி.... உங்கள் தலைமையில் தானே கூட்டணி அமைய வேண்டும் ??... ஏற்கெனவே தமிழ்நாட்டில் கான் கிராஸ் கட்சி வளர்ந்து இருக்கிறது என்று ஆளாளுக்கு சொல்லி கொண்டு இருக்கிறார்கள்.... அதனால் உங்கள் தலைமையில் தாராளமாக புதிய கூட்டணி அமைக்கலாம். 0
0
Reply
கோபாலகிருஷ்ணன் பெங்களூர் - ,
06 பிப்,2026 - 17:32 Report Abuse
அப்படியே திமுகவும் காங்கிரஸும் இணைந்து போட்டி இட்டாலும் காங்கிரஸ் களமிறங்கும் இடங்களில் உள்ளடி வேலைசெய்து தோற்பது உறுதி..... இதில் கைதேர்ந்தவர்கள் திமுகவினர்..... சட்டுபுட்டுன்னு தவெகவுடன் இணைந்து போட்டி இடுவதே இன்றைய சூழ்நிலையில் காங்கிரஸ் சுக்கு நல்லது.....!!! 0
0
Reply
Anand - chennai,இந்தியா
06 பிப்,2026 - 17:27 Report Abuse
சீக்கிரமா கட்டிப்புரண்டு உருளுங்க ... 0
0
Reply
ramesh - chennai,இந்தியா
06 பிப்,2026 - 17:27 Report Abuse
dmk பனங்காட்டு நரி .இந்த சலசலப்புக்கு எல்லாம் அஞ்சாது 0
0
Reply
ramesh - chennai,இந்தியா
06 பிப்,2026 - 17:23 Report Abuse
கெளம்பு கெளம்பு கெளம்பு 0
0
Reply
மேலும் 9 கருத்துக்கள்...
மேலும்
-
இந்திய அணி அமர்க்கள ஆரம்பம் * கேப்டன் சூர்யகுமார் சூப்பர் ஆட்டம்
-
ஷெப்பர்டு 'ஹாட்ரிக்' சாதனை * வெஸ்ட் இண்டீஸ் கலக்கல்
-
இந்திய பெண்கள் அணி சாம்பியன்: தெற்காசிய கால்பந்து தொடரில் அசத்தல்
-
முத்துப்பாண்டி ராஜா தேசிய சாதனை: 'சீனியர்' பளுதுாக்குதலில் அபாரம்
-
இந்திய அணிக்கு ரூ. 7.5 கோடி பரிசு: பி.சி.சி.ஐ., அறிவிப்பு
-
உலக விளையாட்டு செய்திகள்
Advertisement
Advertisement