கல்லுாரி மாணவர்கள் போதை விழிப்புணர்வு
திருத்தணி: திருத்தணி ஒன்றியத்தில், கல்லுாரி மாணவர்கள் சார்பில் போதை பொருட்கள் தடுப்பு குறித்து விழிப்புணர்வு பேரணி, நாடகம் நடத்தப்பட்டது.
திருத்தணி ஒன்றியம், இஸ்லாம்நகர், சீனிவாசபுரம் மற்றும் பெருங்களத்துார் ஆகிய கிராமங்களில், திருவள்ளூர் மாவட்ட குழந்தைகள் நலன் மற்றும் பாதுகாப்பு அலகு, திருத்தணி ஜி.ஆர்.டி., நர்சிங் மற்றும் கல்வியியல் கல்லுாரி ஆகியவற்றின் சார்பில் போதைப் பொருள் தடுப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடந்தது.
ஜி.ஆர்.டி., மருந்தியியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் முதல்வர் மீனாட்சி சுந்தரம் தலைமை வகித்தார். கல்வியியல் கல்லுாரி முதல்வர் ராதிகாவித்யாசாகர் வரவேற்றார்.
இதில், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் நிஷாந்தினி, மாவட்ட நன்னடத்தை அலுவலர் சுதா, குழந்தைகள் நலக்குழு தலைவர் தென்பாண்டியன், திருத்தணி மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் மலர் ஆகியோர் பங்கேற்று போதை தடுப்பு விழிப்புணர்வு பேரணி, நாடகம் ஆகியவற்றை துவக்கி வைத்தனர்.
பேரணியில், 400க்கும் மேற்பட்ட கல்லுாரி மாணவ - மாணவியர் போதை பொருள் தடுப்பு குறித்தான விளம்பர பதாகைகளை கையில் ஏந்தி போதை பொருளுக்கு எதிர்ப்பு தெரிவித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
மேலும்
-
இஸ்லாமாபாதில் வழிபாட்டுத்தலத்தில் குண்டுவெடிப்பு; 25 பேர் உடல்சிதறி பலி
-
ஓட்டுக்கு ரூ.2 ஆயிரம்; ஒவ்வொரு தொகுதிக்கும் ரூ.20 கோடி அனுப்பியது திமுக; நயினார் நாகேந்திரன் திடுக்
-
டிஜிட்டல் மோசடியில் பணத்தை இழப்பவர்களுக்கு ரூ.25 ஆயிரம் இழப்பீடு: ரிசர்வ் வங்கி பரிசீலனை
-
தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பில்லாத திமுக ஆட்சி; நயினார் நாகேந்திரன்
-
மணிப்பூரில் மீண்டும் வெடித்தது வன்முறை; புதிய ஆட்சி மாற்றத்திற்கு பிறகும் பதற்றம்
-
கூட்டணியில் காங்கிரசை இழிவாக பேசும்முறை தொடர்வது நல்லதல்ல; மீண்டும் கொளுத்தி போட்ட மாணிக்கம் தாகூர்