பள்ளிப்பட்டில் தொடர்ந்து பலியாகும் காகங்கள்

பள்ளிப்பட்டு: பள்ளிப்பட்டு வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் உள்ள மரங்களில் வசிக்கும் காகங்களில் நேற்று இரண்டு காகங்கள் இறந்தன.

பள்ளிப்பட்டு வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில், ஏராளமான மரங்கள் உள்ளன. இந்த மரங்களில், காகம், மைனா உள்ளிட்ட பறவைகள் கூடு கட்டி வசித்து வருகின்றன. இதில் வசிக்கும் காகங்கள் கடந்த மாதம் 20ம் தேதி முதல் அடுத்தடுத்து இறந்து கீழே விழுகின்றன. நேற்று இரண்டு காகங்கள் இறந்துள்ளன.

தற்போது, பறவை காய்ச்சல் காரணமாக காகங்கள் இறப்பதாக செய்தி வெளியாகி வரும் நிலையில், பள்ளிப்பட்டு நகர மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

இறக்கும் காகங்களை பாதுகாப்பாக அகற்ற பேரூராட்சி மற்றும் கால்நடை துறையினர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என, கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement