ஓடும் ஆம்புலன்சில் சிசுவின் அழுகுரல் குன்னுாரில் நள்ளிரவில் மகிழ்ச்சி
குன்னுார்: குன்னுார் அருகே மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட கர்ப்பிணிக்கு வழியிலேயே ஆம்புலன்சில் அழகான பெண் குழந்தை பிறந்தது.
குன்னுார் கொலக்கம்பை 'கெரடாலீஸ்' பகுதியை சேர்ந்தவர் தீபா.20. நேற்று முன்தினம் இரவு இவருக்கு பிரசவ வலி ஏற்பட்டன் காரணமாக, 11:10 மணிக்கு 108 ஆம்புலன்சுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. கொலக்கம்பை 'பைலைட்' தேவப்பிரியன்,அவசரகால மருத்துவ உதவியாளர் மூர்த்தி ஆகியோர் ஆம்புலன்சில் தீபாவை அழைத்து சென்றனர்.
இந்நிலையில், மருத்துவமனைக்கு செல்லும் வழியில், தீபாவுக்கு வலி அதிகமானதால் ஆம்புலன்சை வழியிலேயே நிறுத்தி அவருக்கு பிரசவம் பார்க்கப்பட்டது. இரவு, 11:40 மணிக்கு அழுகுரலுடன் அழகான பெண் குழந்தை பிறந்தது. அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். தாயும், சேயும் நலமுடன், ஊட்டி அரசு சேட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். குடும்பத்தினர் ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு நன்றி தெரிவித்தனர்.
மேலும்
-
பிரதமர் மோடியுடன் சந்திப்பு மிகவும் முக்கியமானது: மலேசியா பிரதமர் இப்ராஹிம்
-
அம்மாவின் அர்ப்பணிப்பில் ஓர் ஐ.ஏ.எஸ்.,!
-
தேர்வு மைய குளறுபடி; தமிழகம் முழுவதும் குரூப் 2, குரூப் 2ஏ தேர்வு ஒத்திவைப்பு
-
தமிழகத்திற்கான ரயில்வே திட்டங்களுக்கு நிதி ஒதுக்க வேண்டும்; பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்
-
பஸ் கட்டண உயர்வுக்கு மா.கம்யூ., கண்டனம்
-
மயான சுற்றுச்சுவர் இடிப்பு பொதுமக்கள் சாலை மறியல்