மயான சுற்றுச்சுவர் இடிப்பு பொதுமக்கள் சாலை மறியல்
தர்மபுரி; தர்மபுரி மாவட்டம், வெங்கட்டம்பட்டி அருகே மாதேமங்கலத்தில், 1,000க்கும் மேற்பட்ட குடும்-பத்தினர் வசிக்கின்றனர். இக்கிராமத்திலுள்ள மயானத்தையொட்டிய நிலத்தின் உரிமையாளர் தன் நிலத்தில், மயானத்தின் சுற்றுச்சுவர் இருப்-பதாக, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார். இந்நிலையில், சுற்றுச்சுவரை இடித்து தரும்படி, நீதிமன்ற உத்தரவு வந்துள்ளது.
அதன்படி, நல்லம்பள்ளி பி.டி.ஓ., மற்றும் வரு-வாய்த்துறையினர் முன்னிலையில், பொக்லைன் வாகனம் மூலம் சுற்றுச்சுவர் இடிக்-கப்பட்டது. இதனிடையே மயான நிலம் ஆக்கிர-மிப்பு செய்யப்பட்டு உள்ளதுடன், அதன் சுற்றுச்சு-வரை இடித்ததை கண்டித்து, மிட்டாரெட்டி அள்ளி - - தர்மபுரி சாலையில், நேற்று காலை, 9:00 மணிக்கு, அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் அதியமான்கோட்டை போலீசார் மற்றும் வருவாய்த் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி, சுற்றுச்சுவர் கட்டி கொடுக்கப்படும் என உறுதியளித்தனர். இதையடுத்து, மறியலில் ஈடு-பட்டவர்கள் கலைந்து சென்றனர்.
மேலும்
-
வரும் 12 வரை வெப்பநிலை 2 டிகிரி செல்ஷியஸ் அதிகரிக்கும்
-
8 மாவட்டங்களில் 42 இடங்களில் காட்டுத்தீ
-
கூட்டுறவு விற்பனை சங்க ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு
-
குடிநீர் தட்டுப்பாடு அபாயம்: நீர் மேலாண்மைக்கு உத்தரவு
-
மே 3ல் இளநிலை 'நீட்' தேர்வு; மார்ச் 8 வரை விண்ணப்பிக்கலாம்
-
சனிக்கிழமை பத்திரப்பதிவுக்கு ரூ.1,000 சிறப்பு கட்டணம் ரத்தாகுமா?