பஸ் கட்டண உயர்வுக்கு மா.கம்யூ., கண்டனம்

தர்மபுரி; தர்மபுரி மாவட்ட, மா. கம்யூ., கட்சியின் மாவட்ட செயலாளர் சிசுபாலன் வெளியிட்டுள்ள அறிக்கை: சமீபத்தில், தர்மபுரியில் புதிய பஸ் ஸ்டாண்ட் தொடங்கப்பட்டதை அடுத்து, புதிய பஸ் ஸ்டாண்டிற்கு செல்லும் பஸ்களுக்கு, 3 மற்றும், 4 ரூபாய் என, கட்டணத்தை உயர்த்தி, மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார்.

அதே சமயம், நான்குரோடு வரை அந்த கட்டண உயர்வு பொருந்தாது என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த அறிவிப்புக்கு மாறாக, அனைத்துப் பஸ்களிலும் நான்குரோட்டில் இறங்கும் பயணிகளுக்கும், மூன்று ரூபாய் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இதனால், பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர். தேர்தல் சமயத்தில் மக்களிடையே அதிருப்தியை உருவாக்கவே, இத்தகைய கட்டண உயர்வு வழி வகுக்கும். எனவே, கூடுதல் கட்-டண உயர்வை ரத்து செய்ய வேண்டும்.
இவ்வாறு, அதில் தெரிவித்துள்ளார்.

Advertisement