பிரதமர் மோடியின் மலேசியா பயணம் முதல் டி20 உலக கோப்பை தொடர் வரை; இன்றைய முக்கிய நிகழ்வுகள் (பிப் 07)!

1

நமது நிருபர்




தமிழகம், தேசிய மற்றும் சர்வதேச அளவில் இன்று நடக்கும் முக்கிய நிகழ்வுகள். இன்று (பிப்ரவரி 07) நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய செய்திகள் என்னென்ன?


அது எத்தனை மணிக்கு என்பது குறித்து ஓர் சிறப்பு அலசல். மேலும் தொடர்ந்து விவரங்களை அறிய தினமலர் இணையதளம் தொடர்ந்து படியுங்கள்.

* இரண்டு நாட்கள் பயணமாக பிரதமர் மோடி டில்லியில் இருந்து மலேசியாவுக்கு புறப்பட்டு சென்றார். அங்கு அவருக்கு சிகப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கு வசிக்கும் இந்திய வம்சாவளியினரை இன்று சந்தித்து பிரதமர் மோடி உரையாற்றினார். செமிகண்டக்டர், பேரிடர் மேலாண்மை, சுகாதாரம் உள்ளிட்ட துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையே ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன.



* விருதுநகரில் இன்று திமுக இளைஞரணி தென்மண்டல மாநாடு நடக்கிறது. இந்த மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் உரையாற்றினார். இதுவரை இல்லாத அளவில் எதிர்வரும் சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெறும் என்று அவர் கூறினார்.


* இந்தியா- இலங்கை இணைந்து நடத்தும் 20 அணிகள் பங்கேற்கும் 10வது ஐசிசி ஆடவர் டி 20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இன்று தொடங்கியது. முதல் போட்டியில் நெதர்லாந்தை பாகிஸ்தான் வீழ்த்தியது.


* அதேபோல் கொல்கட்டா ஈடன் கார்டன் மைதானத்தில் மதியம் 3 மணிக்கு நடந்த மற்றொரு போட்டியில் ஸ்காட்லாந்தை வெஸ்ட் இண்டீஸ் தோற்கடித்தது. அமெரிக்காவுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 9 விக்கெட் இழப்பிற்கு 161 ரன் குவித்துள்ளது.

* வார இறுதி நாளான இன்று தங்கம் விலை சவரனுக்கு 1,360 ரூபாய் அதிகரித்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 15 ஆயிரத்து 360 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.

Advertisement