இது நடந்தால்... திமுக கூட்டணியில் இருந்து வெளியேறுவோம்: சொல்கிறார் திருமா!
சென்னை: ''திமுகவிற்கு அழுத்தம் கொடுக்க நாங்கள் விரும்பவில்லை. இந்த இரு கட்சிகள் (பாமக, பாஜ) இடம்பெறும் அணியில் இடம்பெற மாட்டோம்'' என விடுதலை சிறுத்தைக் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து திருமாவளவன் கூறியதாவது: அவர்கள் மதத்தின் அடிப்படையிலான வெறுப்பு அரசியலை சிறுபான்மையினருக்கு எதிராக பரப்பினார்கள். இவர்கள் ஜாதி அடிப்படையிலான வெறுப்பு அரசியலை தலித் சமூகத்திற்கு எதிராக பரப்பினார்கள். சோசியல் இன்ஜினியரிங் என்ற யுத்தியை கையாண்ட காரணத்தினால், நாங்கள் வந்து ஒரு தெளிவான முடிவுக்கு வந்தோம்.
இந்த 2 கட்சிகள்
இந்த மாதிரி சோசியல் இன்ஜினியரிங் என்ற பெயரில் சமூகங்களுக்கிடையில் வெறுப்பை விதைத்து பிரிவினையை உண்டு பண்ண கூடிய நிலையான பகையை வளர்க்கக்கூடிய இந்த இரு கட்சிகளுடனும் (பாமக, பாஜ) எந்த காலத்திலும் நாங்கள் தேர்தல் கூட்டணி வைத்துக்கொள்ள மாட்டோம். இந்தக் கட்சிகள் இடம் பெறக்கூடிய அணியிலும் இடம் பெற மாட்டோம் என்ற ஒரு முடிவை நாங்கள் ஏற்கனவே எடுத்து விட்டோம்.
நிலைப்பாடு
இன்றைக்கு நேற்று எடுக்கவில்லை. அந்த முடிவை எடுக்கும் சுதந்திரமும், அதிகாரமும் எங்களுக்கு இருக்கிறது. ஆனால் திமுகவிற்கு அழுத்தம் கொடுக்க நாங்கள் விரும்பவில்லை. திமுக ஒரு முடிவை எடுத்தால், அது எங்கள் நிலைப்பாட்டிற்கு எதிராக இருந்தால், நாங்கள் அந்த கூட்டணியில் இருந்து வெளியேறுவதை தவிர எங்களுக்கு வேறு வழி இல்லை. அவ்வளவுதான். இதுதான் எங்களுடைய நிலைப்பாடு.
எந்த சமரசமும்…
இதில் நாங்கள் எந்த சமரசமும் செய்து கொள்ளவில்லை. காரணம் நாங்கள் அவ்வப்போது வரும் தேர்தலுக்காக நிலைப்பாடுகளை மாற்றிக் கொள்ளக் கூடாது. நம்முடைய கருத்தியல் சார்ந்த பயணத்தில் நம்பகத் தன்மையை வளர்த்து எடுக்க வேண்டும். அந்த நம்பகத் தன்மையை பாதுகாக்க வேண்டும். அந்த நம்பகத்தன்மையை ஒருபோதும் இழந்து விடக்கூடாது என்ற அடிப்படையில் நாங்கள் எடுத்த நிலைப்பாட்டில் உறுதிப்பாட்டுடன் இருக்கிறோம். இவ்வாறு திருமாவளவன் கூறினார்.
துணை தலைமை மற்றும் அறுபதா என்று தெரிய வில்லை
ஜனாதிபதி தேர்தலில்.... தாழ்த்தப்பட்ட மக்களின் சார்பாக போட்டியிட்ட... திரவுபதி முர்மு அவர்களுக்கு எதிராக வாக்களித்த ஆட்கள் தானே நீங்கள்..... தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மக்கள் யாரும் உன்னை நம்ப மாட்டார்கள்..... உன் சாயம் வெளுத்து விட்டது..... இனியும் மக்களை ஏமாற்ற முடியாது.
வீ சி கா அரசியல் அநாதை யாகி விடும்.
தாழ்த்தப்பட்ட மக்களுக்காக கட்சி நடத்துகிறேன் பேர்வழி என்று சொல்லி கட்சி ஆரம்பித்து விட்டு.... இன்று அந்த மக்களுக்கு எந்த நன்மையும் செய்யாமல்.... குண்டு வைத்து மக்களை கொல்லும் தீவிரவாதிகளுக்கு ஆதரவான நிலையை கட்சி எட்டி இருக்கிறது.... அது தான் உங்கள் கட்சியில் ஏற்ப்பட்ட முன்னேற்றம்.
நொண்டிண்டி குதிரைய்க்கு சரிக்கினது சாக்கு.
ஒரு ஜாதி தலிவனாக இருந்து அடுத்த ஜாதியையும் ஓட்டுப்பிச்சைக்காக இந்துமதத்தையும் திட்டி கொண்டு இருக்கிற நீங்க பேச தகுதியில்லை
நம் இந்திய நாட்டின் சமகால அரசியலை இருபது முப்பது ஆண்டுகளுக்கு முன்பு சற்றே பின் நோக்கி பார்த்தோமானால் அன்றிருந்த கள நிலவரம் என்ன? இன்று மோடி வந்த பிறகு அந்த நிலைமை எவ்வாறு மாறியிருக்கிறது மதத்தின் பெயரால் நிகழ்த்தப்பட்ட வன்முறைகளும் அதனால் ஏற்பட்ட அப்பாவி பொது மக்களின் உயிர்பலிகளையும் இவர் மறந்துவிட்டுத் தான் பேசுகிறாரா. மதவாதமும், பயங்கரவாதமும் எந்த ரூபத்தில் முகம் காட்டினாலும் வாக்கு வங்கி அரசியலுக்காக எந்தவித சமரசம் செய்து கொள்ளாமல் அதை வேரறுக்க நாட்டுபற்றுடனும், உறுதியுடன் செயல்படும் பாஜக மதவாத கட்சியா? நிர்வாக ரீதியிலும் மோடி தலைமையிலான பாஜக அரசு ஊழலற்ற, நேர்மையான ஆட்சியை திறம்பட நடத்தி கொண்டிருப்பதை ஏற்றுக் கொள்ள முடியாத சில அரசியல் கட்சிகள் பாடும் உளுத்துப் போன, உப்பு சப்பற்ற முகாரி ராகம் பாஜக மதவாத கட்சி
நீங்கள் சாதி அரசியல் செய்துகொண்டு மற்றவர்களை பற்றி கூறுகிறீர்கள்
நீ சிறுபான்மையினர் அரசியல் நடத்தி உன் மக்களுக்கே ஏமாற்றம் அளிக்கிறாய்
பொட்டிக்காகமேலும்
-
இந்திய அணி அமர்க்கள ஆரம்பம் * கேப்டன் சூர்யகுமார் சூப்பர் ஆட்டம்
-
ஷெப்பர்டு 'ஹாட்ரிக்' சாதனை * வெஸ்ட் இண்டீஸ் கலக்கல்
-
இந்திய பெண்கள் அணி சாம்பியன்: தெற்காசிய கால்பந்து தொடரில் அசத்தல்
-
முத்துப்பாண்டி ராஜா தேசிய சாதனை: 'சீனியர்' பளுதுாக்குதலில் அபாரம்
-
இந்திய அணிக்கு ரூ. 7.5 கோடி பரிசு: பி.சி.சி.ஐ., அறிவிப்பு
-
உலக விளையாட்டு செய்திகள்