அமைச்சர்களால் தேர்தலை சந்திப்பதில் திமுகவுக்கு பதற்றம்; நிர்மலா சீதாராமன்
புதுடில்லி: திமுக அமைச்சர்களின் செயல்பாடுகளால் திமுக பதற்றத்துடன் தேர்தலை சந்திக்க இருப்பதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
அவர் பேசியதாவது; இந்தியா மிக வேகமான முறையில் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) திறமையாளர்களை உருவாக்கி வருகிறது. அண்மை காலமாக நிலவும் முதலீட்டு மாற்றங்களுக்கு மத்தியில் சர்வதேச முதலீட்டாளர்கள் இந்தியாவில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்தியாவில் ஏஐ தொழில்நுட்பங்களை மேம்படுத்துவதற்கான திட்டங்கள் பெரிய அளவில் இல்லை என்ற வாதமே தவறானது. அது ஒரு சில நிதி மேலாளர்களின் தனிப்பட்ட கருத்து மட்டுமே. ஒவ்வொரு நாட்டிற்கும் அதன் தேவைக்கேற்ப ஏஐ மாற்றங்கள் தேவைப்படுகின்றன.
இந்தியாவின் பலமே மனித வளம்தான். கல்லூரிகள் மற்றும் பள்ளிகளில் இருந்தே இளைஞர்களுக்கு ஏஐ தொடர்பான பயிற்சியும் வழங்கப்படுகிறது. சீனாவைத் தவிர, இந்தியாவைப் போன்று வேறு எந்த நாடுகளும் மனித வளத்தை ஏஐத்துறைக்காக ஈடுபடுத்துவதில்லை.
தமிழக சட்டசபை தேர்தலை பொறுத்தவரையில் திமுகவிற்கு எதிராக தேசிய ஜனநாயகக் கூட்டணி வலுவான போட்டியை கொடுக்கும். எங்களின் கூட்டணி வலிமையாகவும், ஒற்றுமையாகவும் இருக்கிறது. ஆளும் திமுக வழக்கமான முறையில் இந்த தேர்தலை சந்திக்க முடியாது. கடந்த ஓராண்டில் அமைச்சர்களின் செயல்பாடுகளால் முதல்வர் ஸ்டாலின் பதற்றத்துடன் இந்தத் தேர்தல் சந்திக்கிறார், இவ்வாறு அவர் கூறினார்.
எலெக்ஷன்ல நின்னு லட்சம் ஓட்டு வாங்கி ஜெயிச்சவங்க சொல்லார்ங்க கேட்டுகொங்கையா
நிர்மலா தைரியமாக தமிழ்நாட்டு சட்டமன்ற தேர்தலில் போட்டியிடலாமே
நீங்கள் கமலஹாசனின் பேச்சை முழுமையா கேட்கவில்லை போல. பெரியாரையே ஏளனம் பண்ணி பேசியிருக்காரு வே.. நிர்மலம்மா பேசினதுன்னு நெனச்சு உளறல் நாயகன் செய்த கன்னிப் பேச்சு கிழவிப் பேச்சாய் போயிட்டுதுவே
அமைச்சர்களுக்கு தேர்தலை சந்திப்பதில் தயக்கம் - நிர்மலா தனக்கு தானே தேறுதல் சொல்லிக் கொள்கிறார் பாவம்.
நீர் ஒருவரே போதும் அவர்களை காப்பாற்ற.
எல்லாம் சரி கடந்த சுமார் 30 வருடங்களாக தமிழ்நாட்டிலும் சரி இந்திய அளவிலும் அளவுகடந்த ஊழல்களால் பெருமளவு வளங்கள் கொள்ளைபோயின .இது உலகறிந்தது .ஆனால் நீங்கள் ஆட்சிக்கு வந்து ஒருவரைக்கூட ஜெயிலுக்கு அனுப்பமுடியவில்லையே அது ஏன் ? ஊழலுக்கு ஏதிரான கடுமையான சட்டங்கள் ஏதும் ஏற்படுத்தவில்லையே ?நாட்டில் நடக்கும் ஊழல்களை அமெரிக்காவின் FBI போன்று சுதந்திரமாக விசாரிக்கும் ஒரு அமைப்பை கூட ஏற்படுத்தவில்லையே ?100 கோடிக்குமேல் ஊழல் செய்தால் வாழ்க்கை முழுவதும் ஜெயிலில் போடும் சட்டம்கூட இல்லையே ?நீங்கள் எவ்வளவுதான் முன்னேற்றம் கொண்டுவந்தாலும் அவையாவும்மற்றவர்கள் ஊழலால் கரைந்துபோகும் .மக்கள் எப்போதும் இருக்கும் நிலையிலேதான் இருப்பார்கள் .ஊழல்களை விசாரிக்கும் நீதிமன்ற நடைமுறையில் மாற்றம் கொண்டுவாருங்கள் .அப்போதுதான் மக்கள் பயனடைவார்கள் .
ஆளும் கட்சியில் இருப்பவர்களே ஊழல் பண்ணுறாங்க, அப்புறம் எப்படிடி சட்டம். ....?
பாஜாக்கா வாஷிங் மெஷின் அமைச்சரவை ஜெயிலுக்குள் இருந்து தான் இவைகளை செய்ய முடியும்.
Oviya உங்களுக்கு இப்போ சம்பளத்துக்கு கருது எழுதும் Vevek, சிங்கப்பூர், ஆஸ்திரேலியாவில் இன்னும் பல வருவாங்க சிங்கிள் ஸ்டார் போட்டு கலாய்க்க,மேலும்
-
மே 3ம் தேதி நீட் தேர்வு; இன்று முதல் விண்ணப்பிக்கலாம்
-
சந்தேகமா... டாக்டரைக் கேளுங்கள் பகுதிக்காக
-
இந்திய பொருட்களுக்கு அமெரிக்கா வரி குறைத்துள்ளது: மத்திய அமைச்சர் சிவராஜ் சவுகான்
-
பிரதமர் மோடியுடன் சந்திப்பு மிகவும் முக்கியமானது: மலேசியா பிரதமர் இப்ராஹிம்
-
அம்மாவின் அர்ப்பணிப்பில் ஓர் ஐ.ஏ.எஸ்.,!
-
தேர்வு மைய குளறுபடி; தமிழகம் முழுவதும் குரூப் 2, குரூப் 2ஏ தேர்வு ஒத்திவைப்பு