மே 3ம் தேதி நீட் தேர்வு; இன்று முதல் விண்ணப்பிக்கலாம்
புதுடில்லி: மே 3ம் தேதி நீட் நுழைவுத் தேர்வு நடைபெறும் என தேசிய தேர்வு முகமை அறிவித்து உள்ளார்.
மருத்துவத் துறையில் இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்புகளில் சேர்வதற்கு நீட் தேர்வு நடத்தப்படுகிறது. ஆண்டுதோறும் இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு தமிழ், ஆங்கிலம், ஹிந்தி உள்ளிட்ட 13 மொழிகளில் நடைபெறும். நடப்பாண்டு நீட் நுழைவுத் தேர்வு வரும் மே 3ம் தேதி நடைபெறும்.
தேர்வு எழுத தகுதியுள்ளவர்கள் இன்று (பிப்ரவரி 08) முதல் மார்ச் 8ம் தேதி வரை
https://neet.nta.nic.in/ என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். மே 3ம் தேதி பிற்பகல் 2 மணி முதல் 5 மணி வரை நீட் நுழைவுத் தேர்வு நடக்க உள்ளது.
இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கு நீட்-யுஜி தேர்வும், முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கு நீட்-பிஜி தேர்வும் நடத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ஹாஹா எங்க விடியல் ஐயா நீட் தேர்வை ரத்து பண்ண சொல்லி போராட்டம் பண்ணுவாரேமேலும்
-
காங்., எம்பி மனைவியின் பாக்., தொடர்பு குறித்து உயர்மட்ட விசாரணை: அசாம் முதல்வர் வலியுறுத்தல்
-
திமுக- காங்கிரஸ் கூட்டணியில் விரிசல்; இபிஎஸ்
-
சேலத்தில் விஜயின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடுகளுடன் அனுமதி
-
மூன்று குழந்தைகளை பெற்றுக் கொள்ள வேண்டும்: மோகன் பாகவத் வலியுறுத்தல்
-
திமுகவிடம் அதிக தொகுதிகள் கேட்போம்: திருமா திட்டவட்டம்
-
சந்தேகமா... டாக்டரைக் கேளுங்கள் பகுதிக்காக