பிரதமரை தாக்க திட்டம்; சபாநாயகர் கண்டுபிடித்தது எப்படி?
ஜனாதிபதியின் உரைக்கு நன்றி தெரிவித்து, லோக்சபாவில் பிரதமர் பேசுவது வழக்கம். ஜனாதிபதி திரவுபதி முர்முவின் பேச்சுக்கு, கடந்த 4ம் தேதி மாலை 5:00 மணிக்கு உரையாற்ற இருந்தார் பிரதமர் மோடி. ஆனால், லோக்சபாவில் நடந்த கூச்சல் குழப்பத்தால் அவர் வரவில்லை. 'எதிர்க்கட்சி பெண் எம்.பி.,க்கள், இருக்கைக்கு வந்து தாக்கலாம் என்பதால், பிரதமர் மோடியை வர வேண்டாம்' என, கேட்டுக் கொண்டதாக விளக்கம் அளித்தார் சபாநாயகர் ஓம் பிர்லா.
'என்ன நடந்தது?' என்பது குறித்து உள்துறை அமைச்சகத்தில் பேசப்படுவது இது தான். அமைச்சர் அமித் ஷாவிடம் உளவுத் துறை, 4ம் தேதி மாலை ஒரு அறிக்கை அளித்தது. அதில், 'பெண் எம்.பி.,க்கள் ஜோதிமணி, சுதா மற்றும் சிலர் சபையில் பிரதமர் மோடி இருக்கைக்கு அருகே வர திட்டம் தீட்டியுள்ளனர். இதனால், பிரதமருக்கு காயம் ஏற்பட வாய்ப்புள்ளது' என, குறிப்பிடப்பட்டிருந்ததாம்.
அத்துடன், எதிர்க்கட்சி பெண் எம்.பி.,க்கள் இது தொடர்பாக என்ன பேசினர் என்ற ஆடியோவையும், அமித் ஷாவிடம் உளவுத் துறை சமர்ப்பித்ததாம். இதை, உடனே சபாநாயகருக்கு தெரிவித்தாராம் அமித் ஷா.
தவிர, பார்லி.,யில், 300க்கும் அதிகமான, 'சிசிடிவி'க்கள் உள்ளன. ஒருவர் பார்லி.,க்குள் வந்து வெளியேறும் வரை, அவர் என்ன செய்கிறார் என்பதை, 'ஏ.ஐ.,' எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம், இந்த சிசிடிவி தெரிவித்து விடும். மாலை 3:00 மணிக்கு, 10 பெண் எம்.பி.,க்கள் காங்., முக்கிய தலைவருடன், பார்லி.,யில் ஆலோசனை நடத்தி இருப்பதும் தெரிய வந்தது. இதையெல்லாம் வைத்து தான், 'பிரதமருக்கு ஆபத்து வரும்' என, சபாநாயகரும் உணர்ந்து கொண்டாராம்.
மாலை 5:00 மணிக்கு பிரதமர் சபைக்கு வருகிறார் என தெரிந்ததும், ஜோதிமணி, சுதா மற்றும் மஹாராஷ்டிர எதிர்க்கட்சி பெண் எம்.பி.,க்கள், கைகளில் பதாகைகளுடன் பிரதமர் அமரும் இருக்கை அருகே சென்றனர். அப்போது அங்கிருந்த பா.ஜ., - எம்.பி., ரவிசங்கர் பிரசாத், 'எதற்கு பிரதமர் இருக்கைக்கு அருகே நிற்கிறீர்கள்?' என கேட்க, 'அவருக்கு ஒரு புத்தகம் பரிசாக தருவதற்காக காத்திருக்கிறோம்' என, பெண் எம்.பி.,க்கள் கூறினராம்.
வாசகர் கருத்து (55)
Venugopal S - ,
08 பிப்,2026 - 23:11 Report Abuse
அரண்டவன் கண்களுக்கு இருண்டதெல்லாம் பேயாகத் தான் தெரியும்! 0
0
Reply
அப்பாவி - ,
08 பிப்,2026 - 22:35 Report Abuse
ட்ரம்ப்தான் போன் பண்ணி எச்சரிக்கை குடுத்தாராம். 0
0
Reply
Venugopal S - ,
08 பிப்,2026 - 20:15 Report Abuse
வேறு ஒன்றும் இல்லை, தூங்கும் போது கனவு கண்டு இருப்பார்! 0
0
Reply
kulanthai kannan - ,
08 பிப்,2026 - 17:40 Report Abuse
மோடி மீது கல் வீசவேண்டும் என்று டீவியில் பேசியவர்தான் இந்த ஜோதிமணி. 0
0
Reply
உண்மை கசக்கும் - Chennai,இந்தியா
08 பிப்,2026 - 16:49 Report Abuse
கரூர் சம்பவம் நடைபெற்ற உடனே எந்த கட்சியின் தலைவர் தோல்வி கட்சி தலைவரிடம் பேசினார். அந்த தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் யாரு. கூட்டி கழித்து பார். கணக்கு சரியா வரும். 0
0
Reply
Venugopal S - ,
08 பிப்,2026 - 15:04 Report Abuse
எப்படிக் கண்டு பிடித்து இருப்பார்? 0
0
Reply
Apposthalan samlin - sulaymaniyah,இந்தியா
08 பிப்,2026 - 11:15 Report Abuse
அடிச்சு விடுங்க காசா பணமா 0
0
Reply
Shekar - Mumbai,இந்தியா
08 பிப்,2026 - 10:27 Report Abuse
இங்கு பல உபிக்கள் கேலி செய்கின்றனர், ஆதாரம் இல்லாமல் மக்களவை சபாநாயகர் பேச முடியாது. சபையின் பாதுகாப்பு அவரையே சார்ந்தது. அவர் ஒன்றும் திராவிட மாடல் சபாநாயகர் அல்ல. திங்கள் கிழமை சபை கூடட்டும் பார்க்கலாம் 0
0
Reply
Gokul Krishnan - Thiruvanthapuram,இந்தியா
08 பிப்,2026 - 10:14 Report Abuse
அமெரிக்கா உடன் வர்த்தக ஒப்பந்தம் குறித்து யாரும் கேள்வி கேட்க கூடாது அதற்கு தான் இந்த டிராமா மக்களின் கவனத்தை திசை திருப்ப மற்றும் உடனே மலேசியா சுற்றுப்பயணம் 0
0
Arjun - ,இந்தியா
08 பிப்,2026 - 11:56Report Abuse
அமெரிக்காவுடன் வர்ததக ஒப்பந்தம் போட்டாலும் காங்கிரஸீக்கு பிரச்சனை போடாவிட்டாலும் பிரச்சனை இவங்களுக்கு நாடு நாசமாக போகனும் என்று நினைக்கிறது கான்கிரஸ் &கோ. 0
0
Reply
Gokul Krishnan - Thiruvanthapuram,இந்தியா
08 பிப்,2026 - 10:12 Report Abuse
பிஜேபி ஆட்சியில் பார்லிமென்டில் அதுவும் 300 எம் பி கள் பெரும்பான்மையாக இருக்கும் நிலையில் பிரதமருக்கே பாதுகாப்பு இல்லை என்றால் மக்கள் மட்டும் நாட்டின் பாதுகாப்பு லட்சணம் என்ன 0
0
panneer selvam - Dubai,இந்தியா
08 பிப்,2026 - 11:57Report Abuse
Gokul ji , Parliament is under total control of the Speaker as a sovereign area not under control of government and no one could enter including SPG to Parliament . Moreover it is unspoken crime to do any tracking or gathering intelligence on any MP inside the parliament .Look what Rahul did a verbal duel with BJP MP Ravneet Bittu on the staircase of Parliament . it seems Rahul is keen to make some sensational dramas / scenes to get maximum media attention and extra publicity especially with Genz people who loves sensation . Rahul might have planted an idea with female notorious MPs like Jothimani to a chaos in front of PM when he occupies is seat 0
0
SUBBU,MADURAI - ,
08 பிப்,2026 - 19:57Report Abuse
மரியாதையாக அழைக்கத் தேவையில்லை 0
0
Reply
மேலும் 42 கருத்துக்கள்...
மேலும்
-
தனியார் நிறுவன ஊழியர்கள் டூ - வீலர் வாங்க அழைப்பு
-
சந்திர பிரபை வாகனத்தில் லட்சுமி நரசிங்க பெருமாள்
-
பைக் மீது லாரி மோதி விபத்து; திருப்போரூர் அருகே இருவர் பலி
-
மாநில எல்லையில் தடை செய்யப்பட்ட சுரங்கங்களில்... தங்க வேட்டை! உள்ளூர் இளைஞர்களுடன் கேரள கும்பலும் கைகோர்ப்பு
-
திறன் வேலைவாய்ப்பு பயிற்சிக்கு அழைப்பு
-
காந்தையாற்றின் குறுக்கே பாலம் மலைவாழ் மக்கள் வேண்டுகோள்
Advertisement
Advertisement