வெங்காயம் ஏற்றி வந்த லாரியில் 10,500 ஜெலட்டின் குச்சிகள் பறிமுதல்; கேரளாவில் தொடரும் பயங்கரம்
மலப்புரம்: கேரளாவில், வெங்காயம் ஏற்றி வந்த லாரியில், 10,500க்கும் மேற்பட்ட ஜெலட்டின் குச்சிகள், டெட்டனேட்டர்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக லாரியின் உரிமை யாளரிடம் விசாரணை நடக்கிறது.
கேரளாவில் மலப்புரம் மாவட்டத்தின் செம்மாடு பகுதியில், வெடிப்பொருட்கள் கடத்துவதாக போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது. இதன்படி திரூரங்காடி போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று சோதனை நடத்தினர்.
அங்குள்ள செங்கல் சூளையில், சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் நிறுத்தப்பட்டிருந்த லாரியை சோதனையிட போலீசார் முயன்றனர்.
இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அங்கிருந்த சிலர் தப்பியோடினர். இதையடுத்து, அந்த லாரியை போலீசார் சோதனையிட்டனர்.
அதில், வெங்காயம் ஏற்றி வந்த பெட்டிகளுக்கு இடையே, 10,500க்கும் மேற்பட்ட ஜெலட்டின் குச்சிகள், டெட்டனேட்டர்கள், கம்பிகள் அடங்கிய, 245 பெட்டிகள் மறைத்து வைத்திருந்ததை கண்டறிந்து லாரியுடன் பறிமுதல் செய்தனர்.
இதைத்தொடர்ந்து லாரியின் உரிமையாளரான பெண்ணை, கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது, சட்டவிரோதமாக இயங்கும் கல் குவாரிகளுக்கு பயன்படுத்த எடுத்துச்செல்லப்பட்டதா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.
கடந்த 4ம் தேதி, கேரளாவில் பாலக்காடு மாவட்டத்தின் கடம் கோட்டில், வேனில் தர் ப் பூ சணிகளுக்கு மத்தியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த, 18,000 ஜெலட்டின் குச்சிகள் மற்றும் 48,000 டெட்டனேட்டர்களை போலீசார் பறிமுதல் செய்தது குறிப்பிடத்தக்கது.
பச்சை காய்கறி வண்டிகளை யாரும் நிறுத்த மாட்டார்கள் .... லாரியில் இரகசிய அறையில் பல லட்சம் இருக்கும் இது வாகன ஓட்டுநர்களுக்கு கூட தெரியாது.... கடத்தலில் கரை கண்ட ஜனங்கள்....
மலப்புரம் தீவிரவாத கேந்திரம். சேட்டன் நாட்டில் எலெக்ஷன் வருகிறது. அதன் தொடர்பாக இருக்கலாம்.
1). கேரளா ஜம்மு காஷ்மீர் போல் மத்திய இராணுவ படையை நிறுத்த வேண்டும்.
2). ஃபுல் மக்கள் தொகை கணக்கெடுப்பு இஞ்ச் வகையில் எடுக்க வேண்டும்.
3). அடுத்த காஷ்மீர் என்பது கேரளா மற்றும் மேற்கு வங்கம் வருவதை மத்திய அரசாங்கம் தடுக்க வேண்டும்.
தீவிரவாதத்துக்கு கூட இருக்கலாமே... தீர விசாரிக்க வேண்டும்.
உஷ் சத்தமா பேசாதீங்க பிஜேபி உள்ள வந்துரும் , மனித வெடிகுண்டுகள் வேண்டுமா பிஜேபி வேண்டுமா
மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும் ....
எல்லாம் அந்த ஊரோட மகிமை தான்.. தேச துரோகக் கூட்டம் வசிக்குது அங்கே.. மலப்புரத்தை இந்திய ராணுவத்தின் கட்டுபாட்டுக்குள் விரைவில் கொண்டு வர மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தீபாவளிக்கு வெங்காய வெடி தயாரிக்க எடுத்து போனார்களாம். ஹி, ஹி, ஹி.மேலும்
-
திமுக- காங்கிரஸ் கூட்டணியில் விரிசல்; இபிஎஸ்
-
சேலத்தில் விஜயின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடுகளுடன் அனுமதி
-
மூன்று குழந்தைகளை பெற்றுக் கொள்ள வேண்டும்: மோகன் பாகவத் வலியுறுத்தல்
-
திமுகவிடம் அதிக தொகுதிகள் கேட்போம்: திருமா திட்டவட்டம்
-
மே 3ம் தேதி நீட் தேர்வு; இன்று முதல் விண்ணப்பிக்கலாம்
-
சந்தேகமா... டாக்டரைக் கேளுங்கள் பகுதிக்காக