ஐ.நா., செயற்கை நுண்ணறிவு ஆய்வுக் குழுவில் இடம் பிடித்தார் சென்னை ஐ.ஐ.டி., பேராசிரியர்
நியூயார்க்: செயற்கை நுண்ணறிவு குறித்த ஆலோசனைகளை வழங்க ஐ.நா., அமைத்துள்ள புதிய சர்வதேச அறிவியல் குழுவில், சென்னை ஐ.ஐ.டி., பேராசிரியர் பலராமன் ரவீந்திரன் இடம் பெற்றுள்ளார்.
ஏ.ஐ., எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் குறித்து உலக நாடுகளுக்கு நடுநிலையான மற்றும் அறிவியல் ரீதியிலான ஆலோசனைகளை வழங்குவதற்காக, ஐ.நா.,வில் அறிவியல் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
ஐ.நா., பொதுச் செயலர் அன்டானியோ குட்டரெஸ், இந்தக் குழுவில் இடம்பெறும், 40
விஞ்ஞானிகள், ஆராய்ச்சியாளர்கள் பெயர்களை வெளியிட்டுள்ளார்.
இதில், சென்னை ஐ.ஐ.டி., எனப்படும் இந்திய தொழில்நுட்ப மையத்தில் பணியாற்றும் பேராசிரியர் பலராமன் ரவீந்திரன் இடம்பெற்று உள்ளார்.
இக்குழு தன் முதல் மதிப்பீட்டு அறிக்கையை வரும் ஜூலை மாதம் சமர்ப்பிக்க உள்ளது. இக்குழுவில் 19 பெண்கள், 21 ஆண்கள் என மொத்தம் 40 பேர் இடம் பெறுகின்றனர்.
இவர்கள் 2,600 விண்ணப்பங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர். இக்குழுவின் பணிக்காலம் மூன்று ஆண்டுகளாகும்.
அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற பத்திரிகையாளர் மரியா ரெசா மற்றும் அமெரிக்க பேராசிரியர் விபின் குமார் உள்ளிட்டோர் இக்குழுவில் இடம் பெற்றுள்ளனர்.
பலராமன் ரவீந்திரன், அமெரிக்காவின் மாசசூசெட்ஸ் பல்கலையில் முனைவர் பட்டமும், பெங்களூரு இந்திய அறிவியல் கழகத்தில் முதுகலை பட்டமும் பெற்றவர்.
இந்திய தேசிய பொறியியல் அகாடமி மற்றும் ஏ-.ஏ.ஏ.ஐ., ஆகியவற்றின் உறுப்பினராகவும் உள்ளார்.
மேலும், தற்போது சென்னை ஐ.ஐ.டி.,யின் தரவு அறிவியல் மற்றும் ஏ.ஐ., துறை, வத்வானி தரவு அறிவியல் பள்ளி, ராபர்ட் போஷ் மையம் உள்ளிட்டவற்றின் தலைவராகவும் உள்ளார் என்பது குறிப்பிடதக்கது.
மேலும்
-
திமுக- காங்கிரஸ் கூட்டணியில் விரிசல்; இபிஎஸ்
-
சேலத்தில் விஜயின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடுகளுடன் அனுமதி
-
மூன்று குழந்தைகளை பெற்றுக் கொள்ள வேண்டும்: மோகன் பாகவத் வலியுறுத்தல்
-
திமுகவிடம் அதிக தொகுதிகள் கேட்போம்: திருமா திட்டவட்டம்
-
மே 3ம் தேதி நீட் தேர்வு; இன்று முதல் விண்ணப்பிக்கலாம்
-
சந்தேகமா... டாக்டரைக் கேளுங்கள் பகுதிக்காக