ரூபாய் மதிப்பு வலுப்பெறும் 'பிக்கி' வரவேற்பு

இ ந்தியா - அமெரிக்கா இடையிலான இடைக்கால வர்த்தக ஒப்பந்தத்தை, 'பிக்கி' எனப்படும் இந்திய வர்த்தக மற்றும் தொழில் சங்கங்களின் கூட்டமைப்பு வரவேற்றுள்ளது.

ஏற்றுமதி சார்ந்த துறைகளுக்கு இது பெரும் ஊக்கமாக அமையும்; போட்டி நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவின் போட்டித்திறனை உயர்த்தும்; உலகின் மிகப்பெரிய நுகர்வோர் சந்தையுடனான நீண்டகால வர்த்தக உறவுகளை வலுப்படுத்தும் என்று பிக்கி அமைப்பின் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

பிக்கி தலைவரும் ஆர்.பி.ஜி., குழுமத்தின் துணைத்தலைவருமான ஆனந்த் கோயங்கா கூறியது:

நிச்சயமின்மை நீங்கியதுதான் இந்த ஒப்பந்தத்தின் மிகப்பெரிய பலன். மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கிறோம். இது மன ஆறுதலை அளித்துள்ளது. இனி ரூபாய் மதிப்பு வலுப்பெறும். ஜவுளி மற்றும் ஆடை போன்ற வேலைவாய்ப்பு சார்ந்த துறைகளுக்கு நிவாரணம் கிடைக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement