8 மாவட்டங்களில் 42 இடங்களில் காட்டுத்தீ
சென்னை : தமிழகத்தில் எட்டு மாவட்டங்களில், 42 இடங்களில் நேற்று காட்டுத்தீ பிடித்ததாக, வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
தமிழகத்தில் ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலத்தில், வனப்பகுதிகளில் தீ விபத்து ஏற்படுவது வழக்கமாக உள்ளது. குறிப்பாக, நெடுஞ்சாலைகளை ஒட்டிய பகுதிகளிலேயே, இவ்விபத்துகள் அதிகமாக நடக்கின்றன.
இந்திய வன ஆராய்ச்சி நிறுவனம் நேற்று, தமிழக வனத்துறைக்கு அனுப்பிய தகவலில், கிருஷ்ணகிரியில் 18, கன்னியாகுமரியில் 10, திருப்பத்துாரில் 7, தென்காசியில் மூன்று; திண்டுக்கல், ஈரோடு, தேனி, திருவண்ணாமலை மாவட்டங்களில் தலா ஒரு இடம் என, மொத்தம் 42 இடங்களில் காட்டுத்தீ பிடித்ததாக தெரிவித்துள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement