விவாதம் ஜனநாயகத்தின் உயிர்நாடி; லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா பேச்சு

6

பாட்னா: ''விவாதம், கலந்துரையாடல் ஆகியவை ஜனநாயகத்தின் உயிர்நாடி. அதே சமயம், அனைத்து சூழல்களிலும் சபையின் கண்ணியம் மற்றும் ஒழுக்கத்தை பேணுவதும் அவசியம்,'' என, லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா குறிப்பிட்டார்.


பீஹாரில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம் - பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது.


இம்மாநில சட்டசபை நிறுவன தினத்தையொட்டி, பாட்னாவில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற லோக்சபா சபா நாயகர் ஓம் பிர்லா, காகிதமில்லா சட்டசபை நடவடிக்கைகளை உருவாக்கும் நோக்கில், 'இ - விதான்' என்ற மொபைல் போன் செயலியை துவக்கி வைத்தார்.

நிகழ்ச்சியில், சபாநாயகர் ஓம் பிர்லா பேசியதாவது:



தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் சபையின் கண்ணியத்தை பேண வேண்டும். கருத்துகளை தெரிவிக்க எம்.எல்.ஏ., - எம்.பி.,க்களுக்கு உரிமை உண்டு. அப்போது, கண்ணியத்துடன் நடந்து கொள்ள வேண்டும். விவாதங்களும், ஆலோசனைகளும் ஜனநாயகத்தின் உயிர்நாடி.


ஆனால், சபையின் கண்ணியம் எந்த நிலையிலும் விட்டுக் கொடுக்கப்படக் கூடாது. சபையின் விதிகளை உறுப்பினர்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும்.



எம்.எல்.ஏ., - எம்.பி.,க் கள் தங்களது பிரச்னைக ளுக்கு தீர்வு காண்பர் என்ற எண்ணத்திலேயே, தேர்த லில் மக்கள் ஓட்டளிக்கின் றனர். அதை நிறைவேற்றுவது அவர்களின் கடமை.


சட்டசபை அல்லது பார்லி.,யில் தேவையில்லாமல் அமளியில் ஈடுபடுவதை தவிர்த்து விட்டு, மக்கள் பிரச்னைகளை அவர்கள் பேச வேண்டும்.


எம்.எல்.ஏ., அல்லது எம்.பி.,யின் உண்மையான பலம் அவரது நற்பண்புகள், பொறுப்புணர்வு மற்றும் அரசியலமைப்பு நடைமுறைகள் குறித்த அறிவிலேயே உள்ளது.


ஒரு திறமையான பிரதிநிதி தான் ஆட்சியை வெளிப்படையானதாகவும், பொறுப்புணர்வுமிக்கதாகவும் மாற்றுகிறார். இவ்வாறு அவர் பேசினார்.


@block_B@

'இ - விதான்' செயலி

மத்திய அரசின் தேசிய தகவல் மையத்தின், 'கிளவுட்' மூலம் செயல்படும், 'தேசிய இ- - விதான்' செயலி, சட்டசபை நடவடிக்கைகளை முற்றிலும் காகிதமில்லாமல் மாற்ற உதவும். இதன் மூலம், எம்.எல்.ஏ.,க்கள் தங்களது கையடக்கக் கருவிகளிலேயே விதிகள், கேள்வி- - பதில்கள், மசோதாக்கள் மற்றும் குழு அறிக்கைகளை எளிதாகப் பெற்றுக் கொள்ள முடியும்.block_B

Advertisement