மூன்று குழந்தைகளை பெற்றுக் கொள்ள வேண்டும்: மோகன் பாகவத் வலியுறுத்தல்
மும்பை: இந்தியாவில் ஒரு குடும்பத்தில் 3 குழந்தைகளாவது பெற்றுக் கொள்ள வேண்டும் என ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் தெரிவித்துள்ளார்.
பொது சிவில் சட்டம் அனைவரையும் நம்பிக்கையை எடுத்துக்கொண்டு உருவாக்கப்பட வேண்டும்; அது கருத்து வேறுபாடுகளுக்கு வழிவகுக்கக் கூடாது. பாரதத்தை மதமாற்றம் மூலம் சிதைக்க நினைப்பவர்கள் அழிந்து போவார்கள். திருமணம் என்பது சமூகக் கடமை ஆகும். குடும்பத்தில், 3 குழந்தைகளாவது பெற்றுக் கொள்ள வேண்டும். சமூகத்தைப் பேணிப் பாதுகாக்கும் பொறுப்பை ஏற்க வேண்டும்.
ஊடுருவல்காரர்களை அரசு கண்டறியும் முயற்சிகளுக்கு மக்கள் உதவ வேண்டும். மக்கள் அரசின் கண்களாகவும், காதுகளாகவும் இருக்க வேண்டும். உள்ளூர்வாசிகள் சந்தேகத்திற்கிடமான ஊடுருவல்காரர்களை அடையாளம் கண்டு போலீசாரிடம் தெரிவிக்க வேண்டும்.
ஆட்சியில் இருப்பவர்கள்தான் அரசை நடத்துகிறார்கள். நாங்கள் திரைக்குப் பின்னால் இருந்து இயக்குவதில்லை. அரசிற்கு எப்போது ஆதரவு தேவைப்பட்டாலும் ஒத்துழைக்க ஆர்எஸ்எஸ் தயாராக இருக்கிறது. தேசத்திற்கான எனது பணி தொடரும். இவ்வாறு மோகன் பாகவத் பேசினார்.
@block_B@
வங்கதேசத்தில் ஹிந்துக்களுக்கு எதிராக நடந்துவரும் வன்முறை குறித்து மோகன் பாகவத் பேசியதாவது: வங்கதேசத்தில் தற்போதைய நிலை பற்றி நாம் அறிந்ததே. அங்கு 1.25 கோடி ஹிந்துக்கள் வசிக்கின்றனர். அவர்கள் தங்களுக்காக போராட தயாராகிவிட்டனர். அவர்கள் அங்கிருந்து ஓடாமல் தங்கள் இடத்திலேயே இருந்து போராட முடிவெடுத்திருப்பது நல்ல விஷயம். அதே சமயம் போராட துணிந்துவிட்டால், ஒற்றுமையாக இருப்பது அவசியம். எனவே அவர்கள் ஒன்றுபட வேண்டும். அப்படி ஒன்றுபட்டால், அங்குள்ள அரசியல் காரணிகளை தங்கள் நலன், பாதுகாப்புக்கு பயன்படுத்தலாம். அவர்கள் அப்படிப்பட்ட முடிவெடுத்தால், நாம் இங்கிருந்தபடியே என்ன உதவி செய்ய முடியுமோ அதை செய்வோம். உலகெங்கும் உள்ள ஹிந்துக்கள் அவர்களால் என்ன செய்ய முடியுமோ அதை நிச்சயம் செய்வர். அந்த உறுதியை நான் அளிக்கிறேன் என, மோகன் பகவத் பேசினார். block_B
1). மனிதன் ஒரு மம்மல் வகை பாலூட்டி இனத்தைச் சேர்ந்த விலங்கு தான்.
2). முதல் கடமை இனவிருத்தி தான்.
3). மூன்று இல்லை எவ்வளவு முடியுமோ அவ்வளவு குழந்தைகள் பெற்று கொள்ள வேண்டும்.
3). பணம் காசு சொத்து இல்லை வரும் கால குழந்தை செல்வங்கள் தான் சொத்து என்று
நமக்கு 75 வருடங்களுக்கு முன் வாழ்ந்த நமது முன்னோர்கள் எழு எட்டு குழந்தைகளுடன் வாழ்ந்து வந்தனர் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
பாஜக, ஆர்எஸ்எஸ் தலைவர்கள் நமது நாட்டு மக்களை எதிர்காலத்தில் உணவுக்கு மற்ற நாடுகளிடம் கையேந்தும் பிச்சைக்காரர்கள் ஆக்காமல் விட மாட்டார்கள் போல் உள்ளது!
ஆமாம், அய்யா சொல்வது மிக நல்லது. நாம் இருவர் நமக்கு இருவர் என்று கான் கிராஸ் கட்சி நம்மை மூளை சலவை செய்து வைத்திருந்தது, இனிமேல் நாம் இருவர் நமக்கு மூவர் என்று மாறவேண்டும்.
இந்திய மக்கள் குறிப்பாக தமிழினம் இன்னும் ஆஙகிலேயர் விட்டு சென்ற அடிமைத்தனத்திலிருந்து விடுபடவில்லை .தனக்காக தன் தலைவன் சிந்திப்பான் என்று இன்னும் நம்பிக்கொண்டிருக்கின்றான். இவன் வாழக்கயை அவனிடத்தில் ஒப்படைத்துவிட்டு அவன் ஏவலுக்கு பணிசெய்வதே கடமையாக நினைக்கின்றான் .இது மாறும்வரை மாற்றம்வராது .
இவரது இந்த கருத்து நல்லது. சித்தி சித்தப்பா பெரியப்பா பெரியம்மா அத்தை மாமா நாத்தனார் மச்சினன் உறவு முறைகளே அழிந்து போகும் தருணத்தில் உள்ளது. இப்பொழுதே பல தாய் தந்தையர்கள் ஷிப்ட் முறையில் ஆயா வேலைகள் பார்க்க விமானத்தில் பறந்து கொண்டு பெருமை பேசும் நிலை. தங்கள் சுதந்திர வாழ்வை இழந்து மகன் மகளுக்கு அடிமைகளாக வாழ வேண்டிய நிலை. இல்லை என்றால் ஸ்டைலாக சீனியர் சிட்டிசன் ஹோம் வாழ வேண்டிய நிலை.மேலும்
-
வரும் 12 வரை வெப்பநிலை 2 டிகிரி செல்ஷியஸ் அதிகரிக்கும்
-
8 மாவட்டங்களில் 42 இடங்களில் காட்டுத்தீ
-
கூட்டுறவு விற்பனை சங்க ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு
-
குடிநீர் தட்டுப்பாடு அபாயம்: நீர் மேலாண்மைக்கு உத்தரவு
-
மே 3ல் இளநிலை 'நீட்' தேர்வு; மார்ச் 8 வரை விண்ணப்பிக்கலாம்
-
சனிக்கிழமை பத்திரப்பதிவுக்கு ரூ.1,000 சிறப்பு கட்டணம் ரத்தாகுமா?