அங்கன்வாடி ஊழியர், உதவியாளர்கள் விடிய விடிய காத்திருப்பு போராட்டம்
நாமக்கல்; தமிழ்மாநில அங்கன்வாடி ஊழியர், உதவியாளர் சங்கத்தினர், நேற்று, 5ம் நாளாக, நாமக்கல் பூங்கா சாலையில் தொடர் வேலை நிறுத்த காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாவட்ட தலைவர் புர்ஷித்பேகம் தலைமை வகித்தார்.
அதில், தேர்தல் வாக்குறுதிப்படி, அங்-கன்வாடி, சத்துணவு பணியாளருக்கு இளநிலை உதவியாளர் நிலையில், 19,500 ரூபாய் சம்பளம் வழங்க வேண்டும். சமையலர், உதவியாளருக்கு, அலுவலக உதவியாளர் நிலையில், 15,700 ரூபாய் சம்பளம் வழங்க வேண்டும். அரசுத்துறை காலி பணியிடங்களை நிரப்பும்போது, 10 ஆண்டு பணி முடித்த தகுதியுள்ள அங்கன்வாடி, சத்துணவு பணியாளர்களை, 50 சதவீதம் ஈர்க்க வேண்டும். அங்கன்வாடி, சத்துணவு திட்டங்களில் உள்ள, 60,000க்கும் மேற்பட்ட காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும்.தேசிய மருத்துவ காப்பீடு வழங்க வேண்டும்.
அரசு ஊழியர்களுக்கு இருப்பதுபோல், மகப்பேறு விடுப்பு, 12 மாதம், மாதவிடாய் காலவிடுப்பு, தற்செயல் விடுப்பு, 12 நாட்களை மொத்தமாக அனுபவிக்கும் உரிமை வழங்க வேண்டும் என்-பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்-ளனர்.
நேற்று முன்தினம் இரவு முதல், மொபைல் டார்ச் லைட் வெளிச்சத்தில் விடிய விடிய போராட்-டத்தில் ஈடுபட்டனர்.
மேலும்
-
வரும் 12 வரை வெப்பநிலை 2 டிகிரி செல்ஷியஸ் அதிகரிக்கும்
-
8 மாவட்டங்களில் 42 இடங்களில் காட்டுத்தீ
-
கூட்டுறவு விற்பனை சங்க ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு
-
குடிநீர் தட்டுப்பாடு அபாயம்: நீர் மேலாண்மைக்கு உத்தரவு
-
மே 3ல் இளநிலை 'நீட்' தேர்வு; மார்ச் 8 வரை விண்ணப்பிக்கலாம்
-
சனிக்கிழமை பத்திரப்பதிவுக்கு ரூ.1,000 சிறப்பு கட்டணம் ரத்தாகுமா?