வார்லி ஓவியம் வரைந்து சாதனை ஆசிரியர், மாணவர்களுக்கு விருது

ராசிபுரம்: நாமக்கல் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பில், 'வகுப்பறையில் வார்லி' என்ற தலைப்பில் ஓவியங்கள் வரையும் நிகழ்ச்சி, கடந்த, 2025 டிச., 26 முதல், 2026 ஜன., 4 வரை, 10 நாட்கள் நடந்தது. இதில், 81 ஆசிரி-யர்கள், 42 மாணவர்கள் கலந்துகொண்டு பல்-வேறு தலைப்புகளில் வார்லி ஓவியங்களை வரைந்து உலக சாதனை படைத்தனர்.


இதற்கான சான்றிதழ் வழங்கும் விழா, ராசிபுரம் ரோட்டரி அரங்கில் நடந்தது. பயிற்சி நிறுவன விரிவுரையாளர் சுமதி அனைவரையும் வர-வேற்றார். ரோட்டரி சங்க தலைவர் சுரேந்திரன், செயலாளர் மஸ்தான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறு-வன முதல்வர் செல்வம் தலைமை வகித்து பேசினார். புதுச்சேரி ஆல் இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் பொறுப்பாட்சியர் வெங்கடேசன், உலக சாதனை சான்றிதழ்களை வழங்கினார்.

Advertisement