விவேகானந்தா பள்ளி மாணவர்கள் ரோபோடிக் போட்டியில் சிறப்பிடம்
ப.வேலுார்; ப.வேலுார் அருகே உள்ள பாண்டமங்கலம் விவேகானந்தா பள்ளி மாணவர்கள், சென்-னையில் நடந்த சர்வதேச அளவிலான ரோபோடிக் போட்டியில் சிறப்பிடம் பிடித்தனர்.
சென்னை வி.ஐ.டி., பல்கலையில் ஓட்டோ-மேட்டிக்ஸ் மற்றும் வி.ஐ.டி., பல்கலை இணைந்து,
7-வது சர்வதேச ரோபோடிக் போட்டி-களை அண்மையில் நடத்தினர்.பல்வேறு பிரிவுகளில் நடந்த இப்போட்டிகளில், தமிழகம் முழுவதும் இருந்து, 10,000க்கும் மேற்-பட்ட மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர். இதில், பாண்டமங்கலம் விவேகானந்தா வித்யா-லயம் பப்ளிக் பள்ளியில் பயிலும், 7-ம் வகுப்பு மாணவர் நவநீதராம், இளையோர் பிரிவில் இரண்டாம் இடம், ஐந்தாம் வகுப்பு மாணவர் புக-ழேந்தி, கீழ் இளையோர் பிரிவில், இரண்டாம் இடம் பிடித்து சிறப்பிடம் பெற்றனர்.
வெற்றிபெற்ற மாணவர்களை விவேகானந்தா அறக்கட்டளை தலைவர் நெடுஞ்செழியன், அறக்-கட்டளை செயலர் சுப்பிரமணியம், பொருளாளர் வேலுசாமி, தாளாளர் ராமசாமி, இயக்குனர்கள் பழனிசாமி, துரைசாமி, வாசுதேவன் மற்றும் பள்ளி முதல்வர்கள், ஆசிரியர்கள் ஆகியோர் பாராட்டினர்.
மேலும்
-
பிரதமர் மோடியுடன் சந்திப்பு மிகவும் முக்கியமானது: மலேசியா பிரதமர் இப்ராஹிம்
-
அம்மாவின் அர்ப்பணிப்பில் ஓர் ஐ.ஏ.எஸ்.,!
-
தேர்வு மைய குளறுபடி; தமிழகம் முழுவதும் குரூப் 2, குரூப் 2ஏ தேர்வு ஒத்திவைப்பு
-
தமிழகத்திற்கான ரயில்வே திட்டங்களுக்கு நிதி ஒதுக்க வேண்டும்; பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்
-
பஸ் கட்டண உயர்வுக்கு மா.கம்யூ., கண்டனம்
-
மயான சுற்றுச்சுவர் இடிப்பு பொதுமக்கள் சாலை மறியல்