அவசர கதியில் மாரியம்மன் கோவில் கும்-பாபிேஷகம் சேலம் பா.ஜ., நிர்வாகி பரபரப்பு புகார்

சேலம்: அவசர கதியில், சேலம் செவ்வாய்பேட்டை மாரி-யம்மன் கோவில் கும்பாபி ேஷகம் நடப்பதாக பா.ஜ., புகார் தெரிவித்துள்ளது.


இதுகுறித்து, தமிழக பா.ஜ., சுற்றுச்சூழல் பாது-காப்பு மற்றும் பேரிடர் மேலாண்மை பிரிவு மாநில தலைவர் கோபிநாத் நிருபர்களிடம் கூறி-யதாவது:சேலத்தில் பிரசித்தி பெற்ற, செவ்வாய்பேட்டை மாரியம்மன் கோவில் கும்பாபிேஷகம் வரும், 22ல் நடக்கவுள்ளதாகவும், அதற்கான முகூர்த்த கம்பம் நேற்று முன்தினம் நடப்பட்டுள்ளதாக நாளிதழ் வாயிலாக தெரிந்து கொண்டோம்.
கருங்கற்களால் கோவில் கட்டுமான திருப்ப-ணிகள் கடந்த ஓராண்டாக நடந்து வருகிறது. இன்று வரை, 60 சதவீத பணிகள் நடந்துள்ளன. கும்பாபிேஷகத்துக்கு, 14 நாட்களே உள்ள நிலையில், மீதமுள்ள, 40 சதவீத பணிகள் முழு-மையாக முடிப்பது சாத்தியமில்லை.
தமிழக சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விட்டால், கும்பாபிேஷக கல்வெட்டில் முதல்வர், அறநிலையத்துறை அமைச்சர் உள்-ளிட்ட, தி.மு.க.,வினர் பெயர்கள் இடம் பெற முடி-யாது என்பதால், அறங்காவலர் குழுவினர் கட்டு-மான பணிகள் நிறைவடையாத நிலையில், அவ-சர கதியில் கும்பாபிேஷகத்தை நடத்த முடிவு செய்துள்ளனர். இது பக்தர்களிடையே அதிர்ச்-சியை ஏற்படுத்தியுள்ளது.
பல ஆண்டுள் நிலைத்து நிற்க வேண்டிய கருங்-கற்களால் கட்டப்படும் கோவிலை, அவசர அவச-ரமாக கட்டினால் உறுதியாக இருக்காது. ஆகம விதிகளின்படி கும்பாபிேஷகம் நடத்தி விட்டால், அதற்கு பின் கட்டுமான பணிகள் செய்-யக்கூடாது. எனவே கோவில் கட்டுமான பணிகள், 100 சதவீதம் முழுமையாக நிறைவ-டைந்த பின், கும்பாபிேஷகம் நடத்த வேண்டும். இது குறித்து, ஹிந்து சமய அறநிலையத்துறை சேலம் மண்டல இணை கமிஷனர் மற்றும் கோவில் செயல் அலுவலரிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. இதையும் மீறி, பணிகள் முடியும் முன்பே கும்பாபிேஷகம் நடத்தினால், நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும்.
இவ்வாறு கூறினார்.
இது குறித்து, கோவில் செயல் அலுவலர் கலைச்-செல்வி கூறியதாவது:
கடந்த, 2024 டிசம்பரில் இருந்தே கோவில் கட்டு-மான பணிக்கான கருங்கற்கள் வாங்கி செதுக்கி, தயார் செய்யும் பணி துவங்கியது. கடந்தாண்டு, 'பாலாலயம்' செய்து, பழைய கோவில் கட்டு-மானம் முழுவதுமாக இடித்து விட்டு, அஸ்தி-வாரம் முதல் கோபுர கலசம் வரை கருங்கற்-களால் கோவில் கட்டுமான பணி இரவு பகலாக நடந்து வருகிறது. குறிப்பிட்ட தேதிக்குள் தயார் செய்து, வைக்கப்பட்டுள்ள துாண்களை எடுத்து வந்து நிறுத்தி, மேற்கூரைக்கான கற்களை பொருத்தி விட்டால், கட்டுமான பணி நிறைவ-டைந்து விடும். எனவே வரும், 22ல் கும்-பாபிேஷகம் திட்டமிட்டபடி நடத்தப்படும்.
இவ்வாறு கூறினார்.

Advertisement