தூய்மைப் பணியாளர்களுக்குத் துணையாக இருப்போம்; முதல்வர் ஸ்டாலின்
சென்னை: தூய்மைப் பணியாளர்களுக்குத் துணையாக இருப்போம் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம் போலிவாக்கத்தில் இன்று (பிப்ரவரி 09) தூய்மை பணியாளர்களுக்கான காலை உணவுத்திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் தூய்மைப் பணியாளர்களுக்கு உணவுத் திட்டம் விரிவுப்படுத்தப்பட்டு உள்ளது.
இந்த புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பகிர்ந்து முதல்வர் ஸ்டாலின் கூறியிருப்பதாவது: இந்தியாவிலேயே முதன்முறையாகத் தூய்மைப் பணியாளர்களின் பசி போக்கும் திட்டம். 2025ம் ஆண்டு நவம்பரில் சென்னை மாநகராட்சியில் 29,455 பணியாளர்கள் பயன்பெறத் தொடங்கப்பட்ட இத்திட்டம் தமிழ்நாடு முழுவதும் விரிவாக்கம் காண்கிறது.
மீதமுள்ள,
* 24 மாநகராட்சிகளில் 48,768 பேர்,
* 145 நகராட்சிகளில் 29,556 பேர்,
* 479 பேரூராட்சிகளில் 21,910 பேர் என மொத்தம் 1,29,689 தூய்மைப் பணியாளர்களுக்கும் அவர்களது பணிவேளையில் உணவு வழங்கும் திட்டத்தைத் தொடங்கி வைத்தேன்.
தூய்மைப் பணியாளர்களுக்கு வீடு, தொழில் முனைவோராகக் கடனுதவி, ஆயுள் காப்பீடு, அவர்களது குழந்தைகளுக்கு உயர்கல்வி உதவித்தொகை என அவர்களின் ஒட்டுமொத்த உயர்வுக்காகப் பாடுபடுவதுதான் திமுக அரசு. இன்னும் பல நலத்திட்டங்களைச் செய்து தருவோம். என்றும் தூய்மைப் பணியாளர்களுக்குத் துணையாக இருப்போம். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
வாசகர் கருத்து (30)
V Venkatachalam, Chennai-87 - Chennai,இந்தியா
09 பிப்,2026 - 19:13 Report Abuse
ஆமாம் போட்டோ எடுத்துக்குற வரைக்கும். அப்பறம் தனியாக இருப்போம்..தனியாகவே இருப்போம். 0
0
Reply
Kalyanasundaram Linga Moorthi - Accra,இந்தியா
09 பிப்,2026 - 18:20 Report Abuse
people have to think before their votes. why stalin did not do all these years from 2021 0
0
Reply
இந்து - ,
09 பிப்,2026 - 17:26 Report Abuse
யார் உணவு கேட்டா? உணவு தந்தால் தானே அதிலும் ஊழல் பண்ணலாம். உணவுக்கு பதில் பணமாக கொடு. ஆமாம் இத்தனை நாள் சாவடிக்கு விட்டு இப்போது என்ன பொய் கரிசனம்? ஊரை ஏமாற்றிவிட்டு வோட்டுவாங்கவா? 0
0
Reply
Chandru - ,இந்தியா
09 பிப்,2026 - 17:03 Report Abuse
why is he not realising that whatever he talks amounts to just a comedy dialogue ? 0
0
Reply
ponssasi - chennai,இந்தியா
09 பிப்,2026 - 16:24 Report Abuse
இவர்கள் அரசின் கட்டுப்பாட்டில் இருந்திருந்தால் தி மு க அரசு இவர்களை பனி நிரந்ததாரம் செய்திருக்கும் அய்யோ பாவம் இவர்கள் இப்போது தனியார் நிறுவன ஊழியர்கள். அதனால் நாங்கள் உங்களுக்கு துணை மட்டுமே நிற்கமுடியும் தேர்தல் வேறு வரப்போகிறது 0
0
Reply
Murthy - Bangalore,இந்தியா
09 பிப்,2026 - 15:45 Report Abuse
கவுரவமாக வாழ்வதற்கு கூலி கேட்டால் ....சோறுபோடுவது என்பது மிக மோசமான செயல் . .. 0
0
V Venkatachalam, Chennai-87 - Chennai,இந்தியா
09 பிப்,2026 - 19:17Report Abuse
அந்த காலத்திலேயே தேர்தலில் தோற்றால் சோற்றால் அடித்த பிண்டங்கள்.என்பார். பிள்ளையும் அதே பாணியில் ஆட்சி நடத்துறேன் அதுக்கு பேரு திராவிடியா மாடல் ன்னு சொல்லுது. 0
0
Reply
Narayanan - chennai,இந்தியா
09 பிப்,2026 - 15:19 Report Abuse
இந்த வாக்குறுதிகளை இன்னும் தூய்மைப் பணியாளர்கள் நம்பி உங்கள் பின் சென்றால் அதைவிட மடத்தனம் ஒன்றுமில்லை 0
0
Reply
Rajarajan - Thanjavur,இந்தியா
09 பிப்,2026 - 14:11 Report Abuse
பொதுமக்கள் நாங்கள் எப்போதும் தூய்மை பணியார்களுக்கு உதவுகிறோம். மழை, வெயில் பாராமல் உழைக்கும் அவர்களுக்கு, எங்களால் ஆன சிறு உதவிகள் செய்துகொண்டுதான் உள்ளோம். இது மற்றவர் சொல்ல வேண்டிய அவசியமே இல்லை. சும்மா இருப்பவனை சொறிந்துவிடுவது, சும்மா இருக்கும் சங்கை ஊதி கெடுப்பது தான், தி.மு.க. வின் வேலை. வினை விதைத்தவன் வினை அறுப்பான். 0
0
Reply
M Ramachandran - Chennai,இந்தியா
09 பிப்,2026 - 13:21 Report Abuse
செய்வதெல்லாம் செய்து விட்டு இப்போர் பீலா உட் றீங்கலா 0
0
Reply
Kumar Kumzi - ,இந்தியா
09 பிப்,2026 - 13:04 Report Abuse
ஹாஹாஹா துணை நிக்கிறோத சரி அவர்களுக்கு பதவி நிரந்தரம் செய்ய மாட்டோம் ஹிஹிஹி ட்ராமா மாஸ்டர் 0
0
Reply
மேலும் 19 கருத்துக்கள்...
மேலும்
-
வெள்ளி வென்றார் மனு பாகர்: ஆசிய துப்பாக்கி சுடுதலில்
-
சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானமா?: யாரும் சொல்லவில்லை என்கிறார் சசி தரூர்
-
மத்திய பட்ஜெட்டை முதல்வர் ஸ்டாலின் படிக்கவில்லை; மத்திய அமைச்சர் புகார்
-
பிளஸ் 2 மாணவன் வைத்திருந்த கஞ்சாவை தீ வைத்து எரித்த தலைமை ஆசிரியர்; கலெக்டரிடம் போன புகார்
-
கனடாவில் அதிர்ச்சி; இந்திய ஐ.டி. ஊழியர் மர்ம நபரால் சுட்டுக்கொலை
-
முன்னாள் ராணுவ தளபதி எழுதிய புத்தகம் கசிவு: டில்லி போலீஸ் வழக்குப்பதிவு
Advertisement
Advertisement