எந்த முறைகேட்டை மறைக்க தேர்வு ரத்து: விஜய் கேள்வி
சென்னை: '' டிஎன்பிஎஸ்சி நடத்தும் இந்தத் தேர்வு ரத்து செய்யப்பட்டதன் பின்னணியில் என்ன நடந்திருக்குமோ என்ற ஐயம் எழுவது இயல்பே. இன்னும் எந்த மிகப் பெரிய முறைகேட்டை மறைக்க இது நடந்துள்ளதோ என்ற சந்தேகம் எழாமல் எப்படி இருக்கும்? ,'' என தவெக தலைவர் விஜய் கூறியுள்ளார்.
டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வு ரத்து செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து விஜய் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: அரசுப் பணி என்பது, இளைஞர்கள் ஒவ்வொருவரின் உயரிய கனவும் லட்சியமும் ஆகும். அதை அடைய அவர்கள் பல ஆண்டுகளாக இரவு பகலாகக் கண்விழித்துப் படித்து, போட்டித் தேர்வுகளுக்குத் தயாராவார்கள். அப்படிப்பட்ட ஈடு இணையற்ற உழைப்புடன் தயாராகி, முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்று, தமது எதிர்கால வாழ்வு குறித்த மிகப் பெரிய கனவுகளோடு முதன்மைத் தேர்வை எழுத வருவார்கள். அந்த நேரத்தில் தேர்வு ரத்து செய்யப்பட்டால், இவ்வளவு காலம் உழைத்த உழைப்பு வீணாகி விடுமோ என்ற அச்சம் அவர்களின் மனத்தில் ஆழப் பதிந்துவிடும்.
ரத்து செய்யப்பட்ட தேர்வு மீண்டும் நடத்தப்பட்டாலும் அதற்காக மீண்டும் மீண்டும் தங்களது கடின உழைப்பை முதலீடாக்கும் சூழல் உருவாகும். இதனால் இளைஞர்களின் பெறற்கரிய காலம் வீணாவதுடன் மனத்தளவில் அவர்கள் பெரும் பாதிப்பைச் சந்திக்க நேரிடும். எதிர்காலம் குறித்துக் கனவுகளோடு இருந்த இளைஞர்களுக்கு இப்படிப்பட்ட பாதிப்பை உருவாக்கிய இந்த வெற்று விளம்பர மாடல் திமுக அரசு யாருக்காக இயங்குகிறது? இளைஞர்களுக்கு நல்லதொரு நம்பிக்கையான எதிர்காலத்தை உருவாக்கிக் கொடுக்காத இந்த அரசு, இருந்து என்ன பயன்?
இன்று குரூப் 2, 2ஏ தேர்வு திடீரென ரத்து செய்யப்பட்டது, இந்தக் கபட நாடகத் திமுக அரசின் நிர்வாகத் திறமையின்மையையே வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. ஏற்கெனவே நகராட்சித் துறையில் வேலைக்கான தேர்வில் நடந்த முறைகேடுகள் வெளிவந்துள்ளன. இந்நிலையில், டிஎன்பிஎஸ்சி நடத்தும் இந்தத் தேர்வு ரத்து செய்யப்பட்டதன் பின்னணியில் என்ன நடந்திருக்குமோ என்ற ஐயம் எழுவது இயல்பே. இன்னும் எந்த மிகப் பெரிய முறைகேட்டை மறைக்க இது நடந்துள்ளதோ என்ற சந்தேகம் எழாமல் எப்படி இருக்கும்? இதற்கு உரியவர்கள், உண்மையை நேர்மையாகச் சொல்ல வேண்டியது அவர்கள் கடமை என்பதை மறந்துவிடக் கூடாது.
எனவே, வரும் காலங்களில் இது போன்ற தவறுகள் நிகழாவண்ணம் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். வெற்று விளம்பரத்தினால் மட்டுமே இயங்கிக்கொண்டிருக்கும் இந்த அரசுக்கு, வரும் சட்டமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டு இளைஞர் பட்டாளம் வெகுண்டெழுந்து, ஜனநாயக முறைப்படி தக்க பாடம் புகட்டுவது உறுதி. இவ்வாறு அந்த அறிக்கையில் விஜய் கூறியுள்ளார்.
முறைகேட்டைப் பற்றி நீங்க பேசலாமா மிஸ்டர் தூய சக்தி? புலி பட வருமானத்தை மறைத்ததில் நான்கு நாள் முன்பு உயர் நீதி மன்றம் குட்டு வைத்ததே அது எந்த வகையை சேர்ந்தது மிஸ்டர். தூய சக்தி? மற்றவர்கள் இந்த விசயத்தைப் பற்றிப் பேசலாம்! வருமான வரி ஏய்ப்பு முறைகேடு செய்தவர்கள் எல்லாம் முறைகேடு பற்றிப் பேசலாமா?
என்ன யா தூய சக்தி தூய சக்தி கூவிகிட்டு இருந்த கடைசில நீதிமன்றம் வருமான வரி ஏய்ப்பு தீர்ப்பு கொடுத்து இருக்கு வாய் திறக்க வில்லை நீ
பொறுப்பற்ற அரசு பொறுப்பற்ற அதிகாரிகள். நாடு எப்படி விளங்கும்? திறமை கொண்ட வர்கள் பாதிக்கப்படாமல் பதவிக்கு வருபவர்களால் நிர்வாகம் இப்படித்தா இருக்கும்
ok OK.. that 1.5cr paid or not share a receipt ..we know all dmk and admk are corrupt so let us know you are genuine and dont violate the law of land
1). நல்ல கேள்வி??
2). அதே சமயம் உங்கள் இன்கம் டாக்ஸ் கட்ட சொல்லி கோர்ட்டு தீர்ப்பு பற்றி உங்கள் கருத்து என்ன ??
Vijai sir...
“விஜய் சார்… அண்ணாமலை ஜி போல் தைரியமாகவும் உரத்த குரலிலும் பேசுங்கள்.”
விஜய் ஊழல்வாதி என நீதிமன்றம் கூறிவிட்டது.. கரூர் சம்பவத்திற்கு பின் 15 நாட்களுக்கு பனையூர் தலைமை அலுவலகத்தையே மூடிவிட்டு, 72 நாட்களுக்கு வீட்டில் இருந்தே விஜய் வெளி வரவில்லை
சரி விஜய் எந்த முறைகேட்டை மறைக்க ஜன நாயகன் படம் திரை இடாமா ரத்து என்று கேட்டியோ முதலில் உன் கையில் உள்ள அழுக்கை பாரு , எந்த முறைகேடும் நடந்து விட கூடாது என்று தான் ரத்து இது என்ன தொட்ட பெட்ட ரொட்டில முட்டை பரோட்டா போடுவது என்று எண்ணிவிட்டீர்களா
நல்ல கேள்வி அரசு அதிகாரிகள் வசூல் செய்து வருகின்றனர்
தற்காலிகமாக நியமித்து நிதி குடும்பம் நிதியை பார்க்கத்தான் இந்த ரத்து. அடுத்த வாரம் தற்காலிகமாக நியமனம் செய்து விலை பேசுவார்கள்.. இனி இந்த தேர்வு நடைபெறுவது சாத்தியம் இல்லை.மேலும்
-
வரும் 12 வரை வெப்பநிலை 2 டிகிரி செல்ஷியஸ் அதிகரிக்கும்
-
8 மாவட்டங்களில் 42 இடங்களில் காட்டுத்தீ
-
கூட்டுறவு விற்பனை சங்க ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு
-
குடிநீர் தட்டுப்பாடு அபாயம்: நீர் மேலாண்மைக்கு உத்தரவு
-
மே 3ல் இளநிலை 'நீட்' தேர்வு; மார்ச் 8 வரை விண்ணப்பிக்கலாம்
-
சனிக்கிழமை பத்திரப்பதிவுக்கு ரூ.1,000 சிறப்பு கட்டணம் ரத்தாகுமா?