சாவர்க்கருக்கு பாரத ரத்னா கேட்கும் மோகன் பாகவத்; சாவர்க்கரின் பேரன் வரவேற்பு
புதுடில்லி: சாவர்க்கருக்கு பாரத ரத்னா விருது வழங்கினால் அந்த விருதின் கௌரவம் மேலும் உயரும் என மோகன் பாகவத் கூறும் கருத்துடன் உடன்படுவதாக சாவர்க்கர் பேரன் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
வீர் சாவர்க்கருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட வேண்டும் என்பது ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜவின் நீண்டகால கோரிக்கையாகும். அண்மையில் அவரது சிலையை அந்தமானில் திறந்து வைத்து சாவர்க்கரின் தியாகங்களை ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் நினைவு கூர்ந்தார். அண்மையில் சாவர்க்கருக்கு பாரத ரத்னா விருது வழங்கினால் அந்த விருதின் கௌரவம் மேலும் உயரும் என்றும் மோகன் பாகவத் கூறினார்.
இந் நிலையில், மோகன் பாகவத்தின் கருத்துக்கு சாவர்க்கரின் பேரன் ரஞ்சித் சாவர்க்கர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறியதாவது;
மோகன் பாகவத்தின் கருத்துடன் நான் முழுமையாக ஒத்து போகிறேன், உடன்படுகிறேன். சாவர்க்கரை கவுரவப்படுத்த இதை தவிர வேறு எதுவும் தேவையில்லை. சுதந்திர போராட்ட வீரர் என்ற உயர்ந்த மரியாதையே அவருக்கு மிக உயர்ந்தது என்று நான் நினைக்கிறேன்.
நானும், என் குடும்பத்தினரும் சாவர்க்கருக்கு பாரத ரத்னா வேண்டும் என கேட்கவில்லை என்பதை தெளிவாக கூறிவிட்டனர். அதே வழியில் தான் நாங்களும் இருக்கிறோம்.
இவ்வாறு ரஞ்சித் சாவர்க்கர் கூறினார்.
கோட்சேவுக்கே பாரதரத்னா கேட்டாலும் கேட்பார்கள்
சாவர்க்கரின் மன்னிப்பு கடிதங்களை மொத்தம் சேர்த்து அப்படியே அனுப்பி ஆதாரத்துடன் ஐ நா சபையில் விருது கேட்கலாம் ? ஏன் நோபல் பரிசு கூட கேட்கலாம் ? நம்ம ட்ரம்ப் என்கிற மனா நோயாளி கேட்பது போல . ஒரு வித்தியாசமும் இல்லை.மேலும்
-
வரும் 12 வரை வெப்பநிலை 2 டிகிரி செல்ஷியஸ் அதிகரிக்கும்
-
8 மாவட்டங்களில் 42 இடங்களில் காட்டுத்தீ
-
கூட்டுறவு விற்பனை சங்க ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு
-
குடிநீர் தட்டுப்பாடு அபாயம்: நீர் மேலாண்மைக்கு உத்தரவு
-
மே 3ல் இளநிலை 'நீட்' தேர்வு; மார்ச் 8 வரை விண்ணப்பிக்கலாம்
-
சனிக்கிழமை பத்திரப்பதிவுக்கு ரூ.1,000 சிறப்பு கட்டணம் ரத்தாகுமா?