கூட்டணி பேச குழு அமைத்தும் தி.மு.க., தாமதப்படுத்துகிறது: காங்., எம்.பி., மாணிக்கம் தாகூர் தாக்கு
மதுரை: ''கூட்டணி குறித்து பேச, காங்கிரஸ் மேலிடம் குழு அமைத்தும் தி.மு.க., தாமதப்படுத்துகிறது; 36 நாட்களாக காத்திருக்கிறோம்''என காங்., எம்.பி., மாணிக்கம் தாகூர் தெரிவித்தார்.
@1brமதுரை திருநகரில், அவர் அளித்த பேட்டி: மதுரை 'எய்ம்ஸ்' பணிகள் குறித்து, செய்தியாளர்களை அழைத்து ஆய்வு செய்ய, இயக்குனரிடம் பேசி உள்ளோம். கட்டட பணிகள் விரைவாக நடப்பதாகவும், நிறைவடைந்த பின், திறப்பு விழா நடக்கும் எனவும் ஒப்பந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. 'எய்ம்ஸ்' மருத்துவமனையை எப்போது கட்டி முடிக்க போகின்றனர், எப்போது முழுமை பெறும், ராமநாதபுரத்தில் இருந்து மாணவர்கள் எப்போது இங்கு மாற்றப்படுவர் என்பதற்கெல்லாம் மதுரை பொதுக்கூட்டத்தில் பங்கேற்கும் பிரதமர் மோடி பதில் கூற வேண்டும்.
தி.மு.க.,வுடன் தேர்தல் கூட்டணி பேச, காங்., தலைமை கடந்த டிச., 1ல் குழு அமைத்து விட்டது. கிரிஷ் சோடங்கர் தலைமையிலான காங்கிரஸ் குழு, 36 நாட்களாக காத்திருக்கிறது. ஆனால் தி.மு.க., இன்னும் குழு அமைக்கவில்லை. நாங்கள் 36 நாட்களாக பொறுமையுடன் காத்திருக்கிறோம். அமெரிக்காவுடனான ஒப்பந்தம் வாயிலாக, நம் விவசாயிகளை, பிரதமர் மோடி அடகு வைத்து விட்டார்.
ரூ.500 கோடி டாலர் பொருட்கள் இந்தியாவுக்குள் வரும். பட்ஜெட் விவாதத்தில் பிரதமர் மோடி பங்கேற்று, அமெரிக்க ஒப்பந்தம் குறித்து விரிவாக பேச வேண்டும்.
லோக்சபாவில், எதிர்க்கட்சியினரை பேச அனுமதிக்காததை கண்டித்து, மைய மண்டபத்தில் போராடும் சூழல் ஏற்பட்டது. இதற்கு தண்டனையாக, எட்டு எம்.பி.,க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டோம். அவர்களின் சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்து மீண்டும் பேச அனுமதிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
வாசகர் கருத்து (11)
Raj - Chennai,இந்தியா
08 பிப்,2026 - 23:17 Report Abuse
இப்பவும் தி மு க வின் வாலை பிடித்து தானே நடக்கிறீர்கள், தெம்பு இருந்தால் வெளியே வந்து தனித்து நில்லுங்கள். இன்னமும் ஒட்டுண்ணி போல இருக்கணும் என்று விருப்பம் இருக்கிறது. தேசிய கட்சி என்று வெளியே சொல்லாதீர்கள். கேவலம். 0
0
Reply
அருண் பிரகாஷ் மதுரை - ,
08 பிப்,2026 - 23:04 Report Abuse
கூப்பிட விருப்பம் இல்லாமல் கூப்பிடாமல் இருக்கலாம்.ஏன் கூப்பிடுங்க என்று கெஞ்சிக்கொண்டு இருக்கிறீர்கள்.. அழையா விருந்தாளியாக செல்ல விருப்பம் இருந்தால் செல்லுங்கள்.. ஏன் தவெக உங்களை கூட்டணிக்கு அழைக்கவில்லை.. அதே போல திமுகவும் அழைக்கவில்லை.. உங்களை யாரும் அழைக்கவில்லை.. 0
0
Reply
Santhakumar Srinivasalu - ,
08 பிப்,2026 - 22:01 Report Abuse
மானிக் தாகூருக்கு திமுக போட்ட பிச்சை தான் எம் பி பதவி! துள்ளு கெடாய் பூச்சி மாதிரி துள்ளக் குடாது தாகூர்! 0
0
Reply
Thravisham - Bangalorw,இந்தியா
08 பிப்,2026 - 21:58 Report Abuse
கொல வெறி கூட்டம் 0
0
Reply
Santhakumar Srinivasalu - ,
08 பிப்,2026 - 21:56 Report Abuse
தைரியம் இருந்தா ஸ்டாலினிடம் போய் மானிக் தாகூர் பேசனும்! சும்மா திருடன் மாதிரி பேட்டி குடுக்க கூடாது! 0
0
Reply
raja - ,
08 பிப்,2026 - 21:05 Report Abuse
காங்கிரஸ் திமுக சண்டை என்பது பங்காளி சண்டை இது எல்லாம் பூதாகரமாகாது 0
0
Reply
vbs manian - hyderabad,இந்தியா
08 பிப்,2026 - 21:04 Report Abuse
இன்னும் அவமானப்படுத்தி போதுமடா சாமி என்று கொடுத்ததை வாங்க வைக்கும் கழக விளையாட்டு. 0
0
Reply
அன்பே சிவம் - ,
08 பிப்,2026 - 20:12 Report Abuse
1). ஏங்க கெஞ்சிக் கொண்டு உள்ளீர்கள்.
2). விஜய் கொடுத்த ஆஃபர் நல்ல ஆஃபர் தான்.
3). TVK புது கட்சி இதுவரை ஒரு தேர்தல் பார்க்காத கட்சி.
4). தைரியம் இருந்தால் அங்கே போங்க.
5). இல்லையெனில் திமுக கொடுக்கும் பிச்சை வாங்கி கொண்டு சும்மா இருக்க வேண்டியதுதான்.
6). நீங்களே திமுக போட்ட பிச்சை தான் என்பதை நினைவில் கொள்ளுங்கள் 0
0
Reply
ஆகுயர்த்தோன் - ,இந்தியா
08 பிப்,2026 - 19:51 Report Abuse
சரி விஜய் சாவகாசம் என்ன ஆச்சு துரத்தி விட்டார்களா அச்சச்சோ பாவம் ஓடுடா , பாண்டிச்சேரி இல் தனியே DMK மீட்டிங் மவனே வழிக்கு வந்தியா 0
0
guna - ,
08 பிப்,2026 - 22:03Report Abuse
ஆகூர் சொம்பே தமிழக மக்களும் திமுகவை ஒடுடா என்று ஓட்ட போகிறார்கள் 0
0
Reply
KRISHNAN R - chennai,இந்தியா
08 பிப்,2026 - 19:49 Report Abuse
தேசிய கட்சி அதனால் சப்தம். மற்றவர்கள் சைலண்ட் 0
0
Reply
மேலும்
-
வரும் 12 வரை வெப்பநிலை 2 டிகிரி செல்ஷியஸ் அதிகரிக்கும்
-
8 மாவட்டங்களில் 42 இடங்களில் காட்டுத்தீ
-
கூட்டுறவு விற்பனை சங்க ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு
-
குடிநீர் தட்டுப்பாடு அபாயம்: நீர் மேலாண்மைக்கு உத்தரவு
-
மே 3ல் இளநிலை 'நீட்' தேர்வு; மார்ச் 8 வரை விண்ணப்பிக்கலாம்
-
சனிக்கிழமை பத்திரப்பதிவுக்கு ரூ.1,000 சிறப்பு கட்டணம் ரத்தாகுமா?
Advertisement
Advertisement